மக்கள் பிரதிநிதி என்ற வகையில் எமக்கு கருத்து சொல்ல உரிமையிருக்கின்றது.
அனுமதிக்காக விடயத்தை கொடுத்து விட்டு சும்மா மடக்காதீர்கள் என மகளிர் மற்றும் சிறுவ ர்விவகாரங்களுக்கான இராஜாங்க அமைச்சர் திருமதி விஜயகலா மகேஸ்வரனை வட மாகாணசபையின்அவை தலைவர் சீ.வி.கே.சிவஞானம் கடிந்துள்ளார்.
இன்றைய தினம் யாழ்.மாவட்டச் செயலகத்தில் இடம்பெற்ற மாவட்ட அபிவிருத்திக் குழுகூட்டத்திலேயே அவை தலைவர் சிவஞானம் அமைச்சரை கடிந்துள்ளார்.
குறித்த கூட் டத்தில்நல்லூர் பிரதேச சபைக்குட்பட்ட செங்குந்தா பொதுச்சந்தையின் அபிவிருத்திக்காக 25மில்லியன் ரூபா ஒதுக்கீடு செய்யப்பட்டமை தொடர்பாக முன்மொழிவினை யாழ்.மாநகரசபை சபையில் முன்வைத்தது.
இது தொடர்பாக கருத்து தெரிவித்தஅவைத் தலைவர் சிவஞானம் இந்த ஒதுக்கீடு எவ்வாறு எடுக்கப்பட்டது? இது தொடர்பாக யாருடன்பேசப்பட்டிருக்கின்றது? என சபையில் கேள்வி எழுப்பினார்.
இந் நிலையில்இவ்விடயத்தினை முன்மொழிவாக எடுத்துக் கொள்ளுமாறும் பெரிதுபடுத்த வேண்டாம் எனவும் அபிவிருத்தி குழுவின் இணைத்தலைவர்களில் ஒருவரான திருமதிவிஜயகலா மகேஸ்வரன் கேட்டுக்கொண்டார்.
இதன்போது அவைத்தலைவர் அனுமதிக்காக தந்துவிட்டு சும்மா மடக்க வேண்டாம். மக்கள் பிரதிநிதிகளாக எங்களுடை ய கருத்துக்களைகேட்டாக வேண்டும் என சபையில் கடிந்து கொண்டார்.
இதன் பின்னர் இறுதியில் இவ்விடயம் முன்மொழிவு திட்டமாகவே முன்வைக்கப்பட்டுள்ளது. அனுமதிக்காக வழங்கப்பட்டதல்ல தவறுதலாக இணைத்துக் கொள்ளப்பட்டுள்ளது என நல்லூர் பிரதேச சபைசெயலாளரால் தெரிவிக்கப்பட்டது.

No comments:
Post a Comment