July 8, 2016

நிழல் அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து மஹிந்த விலகல்?

கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவையின் பிரதமர் பதவியிலிருந்து முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஸ விலகத் தீர்மானித்துள்ளதாக அரசியல் வட்டாரத் தகவல்கள் தெரிவிக்கின்றன.


கூட்டு எதிர்க்கட்சியின் நிழல் அமைச்சரவை பற்றிய விபரங்கள் நேற்றைய தினம் வெளியிடப்பட்டது.
இந்த நிழல் அமைச்சரவையை அமைக்கும் பணிகளை முன்னாள் அமைச்சர் டலஸ் அழப்பெரும மேற்கொண்டிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது. எனினும் பிரதமர் பதவியிலிருந்து தம்மை நீக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ கோரியுள்ளார்.

நிழல் அமைச்சரவை ஒன்றை அமைக்குமாறு மஹிந்த ராஜபக்ஸ ஆலோசனை வழங்கவில்லை எனவும், அமைச்சுக்களின் நடவடிக்கைகளை கண்காணிக்க குழுக்களை நியமிக்குமாறு மஹிந்த பணிப்புரை விடுத்திருந்தார் எனவும் தெரிவிக்கப்படுகிறது.

பிரித்தானியாவின் வெஸ்ட் மினிஸ்டர் ஆட்சி முறைமையைத் தழுவி இந்த நிழல் அமைச்சரவை உருவாக்கப்பட்டுள்ளது. எனினும், வெஸ்ட் மினிஸ்டர் மரபுகளை மீறும் வகையில் சில நியமனங்கள் மேற்கொள்ளப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சியின் சில உறுப்பினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.

குறிப்பாக நிழல் அமைச்சரவை ஒன்றின் பிரதமராக எதிர்க்கட்சித் தலைவரே பதவி வகிப்பார் என்பது குறிப்பிடத்தக்கது.

எனினும், கூட்டு எதிர்க்கட்சியின் நிழல்; அமைச்சரவையில் ஜனாதிபதி தேர்தலில் தோல்வியடைந்த மஹிந்த பிரதமராக நியமிக்கப்பட்டு உள்ளதுடன், எதிர்க்கட்சித் தலைவர் இந்த அமைச்சரவையின் பிரதமராக நியமிக்கப்படவில்லை என சுட்டிக்காட்டப்பட்டுள்ளது.

அவ்வாறு சம்பந்தன் நியமிக்கப்படாவிட்டால் கூட்டு எதிர்க்கட்சியின் தலைவரும், எதிர்க்கட்சியின் பிரதம அமைப்பாளருமான தினேஸ் குணவர்தன நியமிக்கப்பட்டிருக்க வேண்டுமென சுட்டிக் காட்டப்படுகின்றது.

இதனைப் புரிந்து கொண்ட மஹிந்த நிழல் அமைச்சரவையின் பிரதமர் பதவியை ஏற்றுக்கொள்ள தயங்குவதாகத் தெரிவிக்கப்படுகுpறது.

No comments:

Post a Comment