July 8, 2016

வடமாகாண பொருளாதார மத்திய நிலையம் பற்றிய சர்ச்சை - ஓமந்தையில் அமைவதே பொருத்தமானது!

1977 இனக்கலவரம் வரைக்கும் யாழ்பாணம் மாவட்ட சந்தைகளுக்கு நேரடியாகவே சிங்கள பகுதிகளில் இருந்து லாறிகளில் பொருட்கள் தங்கு தடையின்றி வந்தன.
1977க்கு பின் சந்தை மையம் சாவகச்சேரி கிழிநொச்சி என தெற்ௐகு நோக்கி நகர்ந்தன. 1983 இனக்கலவரத்துக்குப் பின் சந்தை கிழிநொச்சியென்று ஆகினது. தொடர்த யுத்தம் சந்தையை மேலும் தெற்க்கு நோக்கித் தள்ளியது. இறுதியில் வவுனியாவே தென்பகுதிச் சந்தைப் பொருட்களை வடக்குக்கு மாற்றும் பெருஞ்சந்தையாக உருவாகியது. போர் காரணமாக ஆரம்பத்தில் கொழும்பு நீர்கொழும்பு புத்தளம் என்று தென்னிலங்கைக்குப் பெயர்ந்த மக்கள் பின்னர் வவுனியாவில் குடியமர ஆரம்பித்தனர். யாழ்ப்பாணம் முல்லைதீவில் இருந்து வெளியேற்றப்பட்ட முஸ்லிம் மக்களில் ஒருபகுதியினரும் வவுனியாவில் குடி யேறினார்கள்.

இன்றைய வவுனியா நகர வளற்ச்சிக்கும் யுத்ததுக்கும் உள்ள சம்பந்தம் விரிவாக ஆரயப்பட வேண்டியது அவசியம். இப்ப உள்ள சூழலில் மீண்டும் வர்த்தகமும் மக்களும் வடக்கு நோக்கிய பெயர ஆரம்பிபார்கள் என்றே கருதுகிறேன்.


மேற்படி பின்னணியில் வவுனியா நகரம் மதவாச்சி மாவட்டத்துக்குள் தெற்காக வளராமல் வடக்கு நோக்கி வளருவது ஊக்குவிக்கப் படுதல் வேண்டும். வட மாகாண பொருளாதார "மத்திய" நிலையம் ஓமந்தை பொருத்தமான தெரிவு. குறைந்த பட்சம் ஓமந்தை தாண்டிக்குள பகுதிகளுக்குள் விவசாய பள்ளியை பாதிக்காமல் அமையலாம்.


ஓமந்தையில் அமைவதில் உள்ள நன்மை வவுனியாவும் ஓமந்தையும் வடக்கு நோக்கி இரட்டை நகரங்களாக வளர்ந்து மேன்மைபெறும். ஓமந்தையில் மையம் அமைவது தொடர்பாக முஸ்லிம் வர்தகர்களுக்கு ஏதாவது பிரச்சினை இருந்தால் அதனை வடமாகாண சபையும் முஸ்லிம் வர்த்தகர்களும் நேரடியாகவும் தமிழ் முஸ்லிம் தலைவர்களூடாகவும் பேசி சமரசமாகவும் நீதியாகவும் தீர்க்க வேண்டும்.


ஒதுக்கப்பட்ட பணம் திட்டங்களில் முதலிடப்படாமல் திரும்பிச் செல்வது தலைவர்களின் அரசியல் ரீதியாகப் பிரச்சினைகளைத் தீர்க்கும் வல்லமையின்மையாகவே கருதப்படும்.

No comments:

Post a Comment