கிளிநொச்சியின் மண்ணை பெருமை மிக்கதாக கிளிநொச்சி உருத்திரபுரம், சிவநகர் அ.த.க.பாடசாலையின் 15 அகவு பிரிவின் கபடி அணி மாற்றியுள்ளது என தேசிய மட்டத்தில் பெற்ற வெற்றிக்கு வாழ்த்து தெரிவித்து கிளிநொச்சி
மத்திய மகா வித்தியாலம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் பொன்.காந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
மத்திய மகா வித்தியாலம் (தேசிய பாடசாலை) பழைய மாணவர் சங்கம் சார்பாக அதன் செயலாளர் பொன்.காந்தன் விடுத்துள்ள வாழ்த்துச் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்.
அகில இலங்கை மட்டத்தில் நடாத்தப்பட்ட பாடசாலைகளுக்கு இடையிலான கபடிப் போட்டியில் 15 வயதுப் பிரிவில் கிளிநொச்சி சிவநகர் அ.த.க.பாடசாலை அணி தேசிய மட்டத்தில் முதலிடம் பெற்று பாடசாலைக்கும் கிளிநொச்சி மாவட்டத்துக்கும் பெருமை தேடித்தந்திருப்பது மிகுந்து மகிழச்சி தருகின்றது.
தேசிய மட்டச் சாதனையாளர்களை உருவாக்கி முடியும் என்ற முயற்சியில் கிடைத்த வெற்றி கிளிநொச்சி மாணவர்களுக்கு நம்பிக்கையை தருகின்றது.
ஏற்கனவே கிளிநொச்சி மண்ணில் இருந்து தேசிய மட்டச் சாதனையாளர்கள் உருவாக்கப்பட்டிருகின்றார்கள். அதன் தொடர்ச்சியாக சிவநகர் அ.த.க.பாடசாலையின் வெற்றியும் பதிவு செய்யப்படுகின்றது.
இதே வேளை கிளிநொச்சி இந்துக்கல்லூரியின் 19 அகவு அணி இரண்டாவது இடத்தை பெற்றுள்ளதும் இங்கு மகிழ்ச்சிக்கும் வாழத்துக்கும் உரியது.
கிளிநொச்சி மாவட்டம் கடந்த போரால் மிகுந்த பாதிப்புக்களை சந்தித்து இழப்புக்களை சந்தித்தபோதும் இந்த மண்ணோடு இருக்கும் மீண்டெழும் பண்பு மாணவர்கள் ஊடாக வெளிப்பட்டிருக்கின்றது.
வெற்றிக்குரிய பாடசாலைகளின் அதிபர்கள் விளையாட்டுத்துறை ஆசிரியர்கள் மாணவர்கள் கடுமையாக இந்த வெற்றிக்காக பாடுபட்டிருகின்றார்கள்.
விளையாட்டுத்துறையில் உருத்திரபுரம் கிராமம் வரலாற்றிலே சிறந்த வீரர்களை கொண்;டிருந்தது என்பதை மீண்டும் இந்த மாணவர்கள் நினைவு படுத்தியிருக்கின்றார்கள்.
தேசிய மட்டத்தில் பெற்ற இந்த வெற்றிக்கு கிளிநொச்சி சிவநகர் அ.த.க.க.பாடசாலை கிளிநொச்சி இந்துகல்லூரி ஆகிய பாடசாலையின் விளையாட்டு அணியினருக்கும்,
அவர்களின் பயிற்சியாளர்களுக்கும் அதிபர்களுக்கும் எமது பாடசாலையின் அதிபர் பழைய மாணவர் சங்க நிர்வாகம் சார்பில் எமது வாழ்த்துக்களை தெரிவித்துக்கொள்கின்றோம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment