பெண் பொறியாளர் சுவாதி கொலை குற்றவாளியின் புதிய வீடியோ ஒன்றை வெளியிட்ட பொலிசார், இன்னும் 4 நாட்களுக்குள் குற்றவாளியை பிடித்து விடுவோம் என கூறியுள்ளனர்.
பொலிசார் வெளியிட்டுள்ள வீடியோ காட்சியில் இடம்பெற்றிருக்கும் நபரும், கடந்த 24–ந் திகதி பொலிசார் வெளியிட்ட சந்தேகப்படக்கூடிய நபரின் உருவப்படமும் ஒத்துப்போகிறது.
நுங்கம்பாக்கம் ரயில் நிலையத்தை ஒட்டியுள்ள சாலையில் காலை 6.32 மணிக்கு குற்றவாளி என்று சந்தேகப்படக்கூடிய அந்த நபர் தலையை கீழே குனிந்தபடி நடந்து வருகிறார்.
சுவாதியை அவருடைய தந்தை ரயில் நிலையத்தில் இறக்கிவிட்ட நேரம் காலை 6.35 மணி, இந்த இடைப்பட்ட நேரத்தில் தான் அந்த கொலையாளி ரயில் நிலையத்துக்குள் சென்றிருக்க வேண்டும். சுவாதி 6.35 மணிக்கு ரயில் நிலையத்துக்குள் வந்ததும், அக்குற்றவாளி தான் தீட்டிய திட்டங்களை அரங்கேற்றியிருக்க வேண்டும் என பொலிசார் கூறியுள்ளனர்.
சுவாதியை 2–வது நடைமேடையில் வைத்து கொலை செய்யும் அந்த நபர், 6.43 மணிக்கு முதலாவது நடைமேடையில் வெட்ட பயன்படுத்திய அரிவாளை கையில் வைத்து கொண்டு ஓடுகிறார். மொத்தத்தில் கொலையாளி சுமார் 8 நிமிடத்தில் சுவாதியை தீர்த்துக்கட்டிவிட்டு அங்கிருந்து சென்று இருக்கிறார்.
தற்போது அந்த வீடியோ காட்சியில் பதிவான அந்த நபர் தான் இந்த கொலையை செய்துள்ளார் என்பது இந்த வீடியோ மூலம் தெளிவாக தெரிகிறது.
வீடியோ காட்சியில் பதிவான அந்த நபரின் உருவப்படத்தை பெரிதாக்கி, அதில் முகம் தெளிவாக தெரியும் அளவுக்கு தயார் செய்து வருகிறோம்.
அந்த படத்தை வைத்து குற்றவாளியை இன்னும் 4 நாட்களில் பிடித்துவிடுவோம் என பொலிசார் தெரிவித்துள்ளனர்.

No comments:
Post a Comment