தேசிய அரசாங்கம் என்பது இன்னும் எண்ணக்கருவில் மாத்திரமே தான் உள்ளதாக முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
தேசிய அரசாங்கம் குறித்து அரசாங்கம் மற்றும் எதிர்கட்சி
பேச்சுவார்த்தைகளை மாத்திரம் நடத்திக்கொண்டிருக்கிறார்களே தவிர செயற்படுத்துவது தொடர்பாக இதுவரை எதுவித நடவடிக்கைகளை மேற்கொள்ளவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
கொழும்பில் இடம்பெற்ற நிகழ்வொன்றில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும் போதே இவ்வாறு கூறியுள்ளார்.
இதன் போது ஊடகவியலாளர் ஒருவர் இந்திய பிரதமர் நரேந்திர மோடி குறித்து முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்சவிடம் கேள்வியெழுப்பியுள்ளார்.
இதற்கு பதில் அளித்த முன்னாள் ஜனாதிபதி மகிந்த ராஜபக்ச, இன்று நான் இந்திய பிரதமர் நரேந்திர மோடியை சந்திக்கவுள்ளேன், சந்தித்து கலந்துரையாடல் மேற்கொள்ளவுள்ளேன்.
கலந்துரையாடலின் பின்னர் இது தொடர்பாக ஊடகத்திடம் கருத்து தெரிவிக்கிறேன் என அவர் குறிப்பிட்டுள்ளார்.


No comments:
Post a Comment