May 31, 2015

தமிழர்களின் அறிவுச்சொத்து அளிக்கப்பட்டு இன்றோடு 34 ஆண்டுகள் ஆகின்றன. - தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி!

எமது அன்பிற்கும் மதிப்பிற்குரிய தமிழ் உறவுகளுக்கு தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி தமது எழுச்சிகரமான வணக்கத்தை தெரிவித்துக்கொள்கின்றது. இன்று  சிங்கள அரசினால் திட்டமிட்டு அழிக்கப்பட்ட யாழ் நூலகத்தின் 34வது  நினைவு நாளாகும்.


எழுத்துருவில் நூல்கள் உருவான காலம்முதல் அவை அரசுகள் சமூகநிறுவனங்கள் மொழிவளர்ச்சிக் கழகங்கள் பொன்றவற்றால் பேனிக்காக்கப்பட்டன. இதனால் அனைத்துவகை நூல்களையும் காப்பதுடன் மக்கள் பார்வைக்கும் வைக்கவேண்டிய தேவை உலகமெங்கும் உணரப்பட்டது. இதற்காகப் பொது நூலகங்கள் உருவாக்கப்பட்டன. இவ்வகையான நூலகங்கள் 19ம் நூற்றாண்டிலேயே குறிப்பிடத்தக்க அளவில் தோற்றம் பெற்றன.

வாழும் மொழியாகவும் செம்மொழியாகவும் விளங்கும் சிறப்புக்குறிய தமிழில் உலகத்தரத்திலான பல நூல்கள் உள்ளன. இந்நூல்களை பேணிக்காக்கும் பணியில் ஈழத்தமிழர் தனியாகவும் குழுக்களாகவும் செயல் பட்டனர். 19ம் நூற்றாண்டின் நடுப்பகுதியில் நூல்நிலையங்களின் செயல்பாடு ஈழத்தமிழரிடையே கருக்கொள்ளத் தொடங்கியது. 1933ம் ஆண்டில் யாழ்பாணத்தில் ஈகமும் செயலாற்றலும்  மிக்க திரு.  க.மு. செல்லப்பா என்பவரின் வீட்டில் தொடங்கப்பட்டது. இந்நூலகத்திற்கு வரும் வாசகர்களின் எண்ணிக்கையால் யாழ் - மாநகராட்சி தலையிட்டு உலகப்புகழ் பெற்ற கல்விமான் வண. தந்தை லோங் அடிககளார் தலைமையில்  ஒரு குழுவை அமைத்து புதிய கட்டடம் அமைக்க முடிவு செய்தது. இக்குழு புதிய கட்டிடத்திற்கு கலைநிகழ்ச்சிகள், களியாட்ட விழாக்கள்,நல்வாய்ப்புச் சீட்டுக்கள்,நன்கொடைகள் மூலமாகப் பணத்தைத் திரட்டினர். யாழ்ப்பாணத்தின் நடுப்பகுதியில் கட்டிடத்திற்கான இடம் தெரிவுசெய்யப்பட்டது. தமிழகத்தைச் சேர்ந்த திராவிடக் கட்டிடக் கலைஞர்  கே. நரசிம்மன் அவர்களால் வரைபடம் வடிவமைக்கப்பட்டு 29. 03. 1954 இல் நூல்நிலையத்துக்கு அடிக்கல் நாட்டப்பட்டது. 11. 10. 1959 ம் அன்று யாழ்முதல்வராக இருந்த அல்பிறட் துரையாப்பா அவர்களால் யாழ் நூலகம் திரந்து வைக்கப்பட்டது. யாழ் நூலகம் பொலிவோடு நிமிர்ந்து நின்றது. நூலகத்தால் கவரப்பட்ட மக்கள் தங்களிடமிருந்த  பெறுமதிவாய்ந்த நூல்கள், ஆயிரம் ஆண்டுகளுக்கு மேற்பட்ட பழமை மிக்க ஓலைச்சுவடிகள், கையெழுத்துப்படிகள் என்பவற்றை நூலகத்திற்கு கையளித்தனர். அத்தோடு பன்னாட்டு  நூலகவியற் கழகமும் யாழ் நூலகத்துடன் தொடர்புகளைக் கொண்டிருந்தது. இதனால் வெளிநாடுகளில் இருந்தும் பல அறிவியல் நூல்கள் கிடைக்கப்பட்டன. இவ்வாறான வளர்ச்சியினால் யாழ் நூலகம் தெற்காசியாவிலேயே சிறந்த நூலகங்களில் ஒன்றாகப் போற்றப்பட்டது.

இந்நூலகத்தில் சிறுவர்களுக்கான பகுதியும், விரிவுரைகள், கலைநிகழ்வுகள் நடத்துவதற்கான கூடமும் அமைந்திருந்தது. சிறுவர் முதல் பல்கலைக்கழக மாணவர்கள் ஆய்வாளர்கள் வரை பலருக்கும் உறுதுனையாக விளங்கியது. இந்நூலகம் வெளியரங்கு, முற்றவெளி, வீரசிங்க மண்டபம், கோட்டை, விளையாட்டுத்திடல், நகராட்சிமன்றம், யாழ் நடுவகக் கல்லூரி, சுப்பிரமணியம் சிறுவர் பூங்கா  அகியவற்றுக்கு நடுநாயகமாக நிமிர்ந்து நின்றது. ஓரே வேளையில் பன்னூறு பேர் அமர்ந்து பயன் பெறும் வகையில் அமைதிப் பூங்காவாகவிளங்கிய யாழ் நூலகத்தைக் காவு கொள்வதற்கு மாவட்ட ஆட்சித் தேர்தல் என்ற உருவில் ஊற்றம் வந்தது.

1981 ல் நடைபெற்ற தேர்வில் தமிழ்மக்களின் ஏகொபித்த முழு ஆதரவும்  தமிழர் விடுதலைக் கூட்டணிக்கே  கிடைத்தது. இதனால் சீற்றம் கொண்ட சிங்கள வெறியர்கள் 31. 05. 1981 ல் அன்று நள்ளிரவில் அமைச்சர் காமினி திசநாயக்கா தலைமையில் காவல் துறையினரின் துனையுடன் யாழ் நகருக்கு தீயிட்டனர். பல வணிக நிலையங்கள், வழிபாட்டுத்தலங்கள், தமிழ் நாளிதழான ஈழநாடு அலவலகம், தமிழர் விடுதலைக் கூட்டணிப் பணிமனை, பல வீடுகள் என எரிந்து சாம்பளாகின. இத்தனைக்கும் மனநிறைவு கானாத சிங்களக் காடையர்கள் ஈழத்தமிழகத்தின் அறிவுக்கண்ணாக விளங்கிய யாழ் நூலகத்திற்கு தீயிட்டனர். காடலையும் விளங்குகள் கூடச் செய்யாத இழிசெயலை செய்தது சிங்களக் கொடுங்கோல் அரசு .

97 000 நூல்களும் காலத்தால் மூத்த ஒட்டச்சுவடிகளும் நிறைந்து கிடந்த தேடற்குரிய செல்வமாகிய அந்த அறிவுக்களச்சியம் தீக்கரையானது. 'நல்லரசு இல்லா நாட்டிலும் புலிகள் வாழும் காடு நன்று', என்பது தமிழர் வாழ்வரம். எத்தனை  உண்மை. நூலகம் எரிகின்ற அந்தச் செய்தி கேட்ட உடனேயே ஏங்கித் துடித்து விழுந்து இறந்தார் அதி. வண. தந்தை தாவீது அடிகள். இந்த அறக்கொடுஞ் செயலை எப்படிதான் தாங்கினரோ யாழ்மக்கள்.

தமிழீழ மக்களுக்கு மாறாத வலியையும் ஆறாத வடுவையும் தந்த பேரிழப்புக் காரணம் ஒருபுறம் தரப்படுத்தலால் தமிழரது கல்விவளர்ச்சியைத் தடுப்பது. மறுபுறம் அவர்களது அறிவுப்பெருக்கத்துக்கு காரணமான நூலகத்தை எரிப்பது. இதன் மூலம் தமிழர்கள் கல்விமான்களாக பேரறிஞர்களாக உருவாக்குவதைத் தடுப்பது. இதுவே சிங்களத்தின் முதன்மை நோக்கம்.

ஈழத்தமிழர்களின் வாழ்வியலில் யாழ் நூலக எரிப்பானது மறக்கமுடியாத ஒரு தாக்கத்தை ஏற்ப்படுத்தியுள்ளது. யாழ் நூலகத்தை திட்டமிட்டு தீக்கிரையாக்கியவர்களில் ஒருவர் கூட இதுவரையில் தண்டிக்கப்படவில்லை என்பது குரிப்பிடத்தக்கவிடயமாகும். ஆகவே எமது வரலாற்றை அழிக்க முயன்றவர்களோடு சேர்ந்து வாழ்வது என்பது இயலாத காரியமாகும். சுதந்திர தமிழீழம் ஒன்றே ஈழத்தமிழர்களிற்கான தீர்வு என்பதை சர்வதேச சமூகத்திற்கு மீண்டும் ஒரு முறை சுட்டிக்காட்ட விரும்புகின்றோம். அத்தோடு எமது தேசத்தை வென்றெடுக்கும் வரை ஓயாது போராடுவோம் என உறுதியெடுத்துக் கொள்கின்றோம்.

' நல்ல நூல்களே எமது நல்ல நண்பர்கள்' 

தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்!
 நன்றி
தமிழ் இளையோர் அமைப்பு – யேர்மனி

No comments:

Post a Comment