மியன்மாரில் ரோஹிங்க்ய இன மக்களுக்கு எதிராக பல காலங்களாக பௌத்த
பயங்கரவாதத்தால் அரசின் அனுசரணையுடன் திட்டமிட்ட இனப்படுகொலை நடந்தேறி
வருகின்றது . இப் படுகொலைகள் சர்வதேச அரங்கில் வெளியாகிய பின்னரும் அந்த
மக்களை அழிவில் இருந்து பாதுகாக்க எவராலும்
முடியவில்லை.இப் படுகொலைக்கு எதிராக ஐநா சபையும் எவ்வித பாரிய கண்டனங்களை தெரிவிக்காது நிற்கின்றது .
கடந்த வாரங்களாக ரோஹிங்க்ய மக்கள் மீண்டும் பௌத்த பயங்கரவாதத்தால் தீவிரமாக மிருகத்தனமாக படுகொலை செய்யப்பட்டு வருகின்றனர் . இப் படுகொலையை ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் வன்மையாக கண்டிப்பதோடு அந்த மக்களின் இருப்புக்கான பாதுகாப்பை சர்வதேசம் உறுதிப்படுத்த உடனடியாக செயற்பட வேண்டும் என்பதை வலியுறுத்தி நிற்கின்றோம் .
இன்று மியன்மாரில் நடைபெறும் இன அழிப்புக்கு முக்கிய காரணமாக இருக்கும் பௌத்த பிக்கு விராத்து, 2014 ஆண்டு சிறிலங்காவில் நடைபெற்ற பொதுபல சேனாவின் மாநாட்டில் கலந்துகொண்டதும் இங்கு குறிப்பிடத்தக்கது .
விடுதலைக்காக எமது தேசம் மதிப்பிட முடியாத பெரு விலையைக் கொடுத்திருகின்றது.விடுதலைக்காக எமது மண்ணில் இரத்த ஆறு ஓடியிருகின்றது . விடுதலைக்காக எமது மக்கள் இன்றும் படுகொலை செய்யப்பட்டு வரும் வகையில் ஈழத்தமிழர்கள் ஆகிய நாம் உயிரிழப்புகளின் வேதனையையும் , இன அழிப்பின் வலியையும் நன்கு அறிந்தவர்கள் என்ற வகையில் ரோஹிங்க்ய இன மக்களோடு எமது விடுதலை உணர்வின் தோழமையை காட்டி நிற்கின்றோம் . ஈழத்தமிழர்களின் படுகொலையை தடுத்து நிறுத்த தவறிழைத்த சர்வதேசம் மீண்டும் ஒரு இன மக்களின் அழிவை மௌனமாக பார்துக்கொண்டிருகின்றது என்பது நாம் சர்வதேச சமூகத்திடம் வைத்திருக்கும் நம்பிக்கையை இழக்க செய்கின்றது
ரோஹிங்க்ய இன மக்களின் இனப்படுகொலைக்கு எதிராக குரல் கொடுத்து வரும் மியன்மார் நாட்டு கலாநிதி Maung Zarni அவர்கள் தமிழ் மக்களின் இனப்படுகொலைக்கு தொடர்ந்து குரல் கொடுப்பதும், அனைத்துலக ஈழத்தமிழர் மக்கள் அவையால் சென்ற மார்ச் மாதம் ஜெனீவா நகரத்தில் நடைபெற்ற ஊடகமாநாட்டில் கலந்துகொண்டதும் , தொடர்ந்து நோர்வேயில் நடைபெற்ற தமிழின அழிப்பு நாளில் சிறப்பு பேச்சாளராக கலந்துகொண்டதும் அவர்களின் ஈழத்தமிழர்களுகான தோழமையை நிலை நிறுத்திகாட்டுகின்றது.
அதேபோல் ரோஹிங்க்ய இன மக்களின் இனபடுகொலைக்கு எதிராக நோர்வே நாட்டில் நடைபெற்ற மாநாட்டில் நோர்வே ஈழத்தமிழரவை உறுதுணையாக நின்றதோடு தமிழ் மக்களும் கலந்துகொண்டதும் மற்றும் ஏனைய நாடுகளில் நடைபெறும் போராட்டங்களில் மக்களவை பிரதிநிதிகள் கலந்துகொண்டு எமது ஆதரவை அவர்களுக்கு கொடுத்து வருகின்றது இனப்படுகொலைக்குள் உள்ளாகி வரும் இனங்கள் ஒன்றாகி தமது இருப்புக்கான போராட்டங்களை வலுப்பெற வைக்க வேண்டும் என்பதையே சுட்டிக் காட்டி நிற்கின்றது .
இந்த இனப்படுகொலைகளில் இருந்து மக்களைக் காப்பாற்ற சர்வதேசம் தவறுவதும் , மௌனம் காட்டுவதும் , எந்த இனமும் அவர்களாகவே அவர்களை பாதுகாக்க வேண்டும் என்பதுதான் நமக்கு உலகில் எல்லா இன அழிப்பு சம்பவங்களுக்கும் தெரிவிகின்ற வாக்குமூலம் .

No comments:
Post a Comment