June 5, 2015

திருமணமாகாத யுவதி பிசவித்த குழந்தை: ஏற்க மறுத்ததால் களேபரமான யாழ்.வைத்தியசாலை!

திருமணமாகாத நிலையில் தான் பிரசவித்த குழந்தையை ஏற்க மறுத்துள்ளார் யாழ்ப்பாண யுவதியொருவர். இதனையடுத்து, அவரை காப்பகமொன்றில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார் யாழ்.சிறுவர் நீதிவான் நீதிமன்ற நீதிவான் ஜெ.கஜநிதிபாலன். நேற்று இந்த சம்பவம் நடந்துள்ளது.

30 வயதான இந்த யுவதி திருமணம் முடிக்காத நிலையில், தவறான உறவொன்றினால் கர்ப்பம் தரித்துள்ளார். நிறைமாத கர்ப்பிணியாக யாழ்.போதனா வைத்தியசாலையில் அனுமதிக்கப்பட்ட நிலையில், கடந்த முதலாம் திகதி குழந்தையொன்றை பிரசவித்துள்ளார்.
திருமணத்திற்கு அப்பாலான உறவின் மூலம் பிறந்த குழந்தையை அந்தப்பெண் ஏற்க மறுத்து விட்டார். அந்த குழந்தையை ஏற்றுக் கொண்டால் சமூகத்தில் தனக்கு கெட்டபெயர் ஏற்பட்டுவிடுமென அவர் அடம்பிடித்து அழுதுள்ளார். இதனால் வைத்தியசாலை நிர்வாகம் குழப்பமடைந்து விட்டது.
விடயம் பொலிசாருக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, நேற்று அவரை விசாரணை செய்த பொலிசார், சிறுவர் நிதிமன்றத்தில் முற்படுத்தியது. வழக்கை விசாரித்த நீதிவதன், குழந்தையின் பாதுகாப்பை கருத்தில் கொண்டு பெண்ணை காப்பகத்தில் தடுத்து வைக்க உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment