July 3, 2016

மத்திய வங்கி ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி! - மீண்டும் தமிழரை நியமித்தார் ஜனாதிபதி !

இலங்கை மத்திய வங்கியின் புதிய ஆளுனராக கலாநிதி இந்திரஜித் குமாரசுவாமி, ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேனவினால் நியமிக்கப்பட்டுள்ளார்.
இலங்கையின் முக்கிய பொருளாதார நிபுணரான இந்திரஜித் குமாரசுவாமி, பொதுநலவாய செயலகத்தின் பொருளாதார விவகாரங்களுக்கான முன்னாள் பணிப்பாளர் என்பது குறிப்பிடத்தக்கது.

 
கொழும்பு றோயல் கல்லூரியில் கல்வி கற்ற இவர், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் தனது பட்டப்படிப்பை நிறைவு செய்ததுடன், சசெக்ஸ் பல்கலைக்கழகத்தில் கலாநிதிப் பட்டத்தை பெற்றிருந்தார். 1973ஆம் ஆண்டு இவர், இலங்கை மத்திய வங்கியில் இணைந்து 1989ஆம் ஆண்டு வரை பணியாற்றியிருந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய ஆளுனர், தனது கடமைகளை 4 ஆம் திகதி பொறுப்பேற்றுக்கொள்வார். மத்திய வங்கி ஆளுனராக இருந்த அர்ஜுன் மகேந்திரனின் பதவிக்காலம், கடந்த 30ஆம் திகதியுடன் நிறைவடைந்தமை குறிப்பிடத்தக்கது.


No comments:

Post a Comment