July 4, 2016

அரசுடனோ, அமெரிக்காவுடனே இணக்கப்பாட்டை ஏற்படுத்தவில்லை! - கூட்டமைப்பு !

ஐ.நா மனித உரிமை பேரவையில் கொண்டு வரப்பட்ட தீர்மானம் தொடர்பாக இலங்கை அரசாங்கம் மற்றும் அமெரிக்காவுடன் தாம் இணக்கப்பாட்டை ஏற்படுத்தியுள்ளதாக வெளியாகியுள்ள செய்திகள் பொய்யானவை என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு தெரிவித்துள்ளது.
இதுதொடர்பாக அறிக்கை ஒன்றை வெளியிட்டுள்ள கூட்டமைப்பு முன்பிருந்த தமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் இல்லை எனக் கூறியுள்ளது.

 
நாட்டில் நல்லிணக்கம் ஏற்படுத்துவதற்காக முழுமையான அர்ப்பணிப்புடன் செயற்படுவோம். அதற்கு எதிர்காலத்தில் தேவையான அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்படும். மறுசீரமைப்பு செயற்பாடுகளை முன்னெடுத்துச் சென்று சகல பிரஜைகளுக்கு நியாயம் மற்றும் சமத்துவத்தை மீண்டும் உறுதிப்படுத்துவது மாத்திரமல்லாது, பிளவுபடாத ஐக்கியமான இலங்கையை கட்டியெழுப்பு எதிர்பார்த்திருப்பதாகவும் கூட்டமைப்பு குறிப்பிட்டுள்ளது.

இதன் காரணமாக தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு குறித்து மேற்கொள்ளப்பட்டு வரும் பொய் பிரசாரங்களுக்கு ஏமாற வேண்டாம் என கூட்டமைப்பு கோரிக்கை விடுத்துள்ளது.

No comments:

Post a Comment