July 2, 2016

கச்சத்தீவை மீட்கவும் இழந்த மீன்பிடி உரிமையை பெற்றுத்தரவும் வழியுறுத்தி ராமேஸ்வரத்தில் வாழ்வுரிமைக்கட்சி சார்பில் ஆர்பாட்டம்!

இலங்கை-இந்திய அரசுகளை கண்டித்தும் கச்சத்தீவை மீட்க வழியுறுத்தயும் தமிழக வாழ்வுரிமைக்கட்சி சார்பில்  ஆர்பாட்டம் நடத்தினர்.


ராமேஸ்வரம் பேரூந்து நிலையம்  முன்பு தமிழக வாழ்வுரிமை கட்சித் தலைவர் வேல்முருகன் தலைமையில்  விசைபடகு மீனவர்களும் மீனவசங்கபிரதிநிதிகளும்  மற்றும் மீனவப்பென்கள்  ஆர்பாட்டத்தில ;ஈடுபட்டனர் ஆர்பாட்டத்தில்  இலங்கைக்கு துணைபோகும் இந்திய அரசைகண்டித்தும்  இலங்கை கடற்படையினரின் தாக்குதலை தடுத்து நிறுத்த வழியுறுத்தியும்.

இலங்கை கடற்படையால் சிறைபிடிக்கப்பட்ட 29  மீனவர்களையும்104  படகுகளையும் விடுவிக்க வேண்டும், மீனவர்களின்   பாரம்பரிய சொத்தான கச்சத்தீவை மீட்டுத்தர வேண்டும என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வழியுறுத்தி கோஷங்கள் எழுப்பட்டன.

ஆர்பாட்டத்தின் முடிவில் மீனவசங்கத்தலைவர்களும் சிறைபிடிக்கப்பட்டு விடுவிக்கப்படாத படகு உரிமையாளர்களும் பாதிக்கப்பட்ட மீனவப் பென்களும்     மத்திய,மாநில, அரசுகளை கண்டித்து பேசினார்கள சமிப காலமாக  ராமேஸ்வரம் மீனவர்கள் இலங்கை கடற்படையினரின் தாக்குதல் மற்றும் கைது நடவடிக்கைகளுக்கு அஞ்சி  ஏராளமான படகுகளை நிறுத்தியதால் பல ஆயிரக்கணக்கான மீனவக் குடும்பங்கள் தங்களின் வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருவதாகவும் அரசு தலையிட்டு நிரந்தர தீர்வை ஏற்படுத்தி தரவேண்டும் எனவும் கோரிக்கை விடப்பட்டுள்ளது

வேல்முருகன்
தமிழக வாழ்வுரிமைக்கட்சி தலைவர்

No comments:

Post a Comment