சாலாவ இராணுவ களஞ்சியசாலையில் உரிய தரத்துடன் ஆயுதங்கள் பேணப்படவில்லை என பெயர் குறிப்பிடாத இலங்கை இராணுவத்தின் மூத்த அதிகாரியொருவர் கூறியுள்ளார்.
குறித்த களஞ்சியசாலையில் போதிய காற்றோட்டம் இருக்கவில்லை என்பதுடன் அந்த களஞ்சியசாலை குறித்து கவனம் செலுத்தப்படவில்லை எனவும் உரிய முறையில் அவை பேணப்படவில்லை எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இந்த முகாமிலுள்ள ஆயுதக் கிடங்கில் வெறுமனேயே வெடி பொருட்கள் வைக்கப்பட்டு, அந்த கிடக்கு பூட்டப்பட்டிருந்தாக அவர் கூறியுள்ளார்.
குறித்த ஆயுதக் கிடங்கில் வெப்பநிலை கட்டுப்பாடுகளோ காற்றோட்ட கருவிகளோ காணப்படவில்லை என்பதுடன், தீ ஏற்பட்டால் அதற்கான முன்எச்சரிக்கை கருவிகளும் இருக்கவில்லை.
அவசியமான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தால் சாலாவ முகாமில் ஏற்பட்ட வெடிப்பினால் வெளியிடங்களுக்கு பாதிப்பு ஏற்பட்டிருக்கலாது என குறித்த இராணுவ அதிகாரி சுட்டிக்காட்டியுள்ளார்.
அதிக சனநெரிசல் மிக்க பகுதிகளுக்கு பதிலாக பின்தங்கிய பகுதியொன்றிலேயே ஆயுதங்கள் களஞ்சியப்படுத்தப்பட வேண்டும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்துள்ளார்.
வெயங்கொடை ஆயுத களஞ்சியசாலையிலும் அனர்த்தம் ஏற்படக் கூடிய நிலைமை காணப்படுவதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வெடி பொருட்கள் களஞ்சியப்படுத்தப்பட்ட பகுதியில் தீ ஏற்பட்டால், சாதாரண தீயை போன்று தீயணைப்பு வீரர்களால் அதனை கட்டுப்படுத்த முடியாது என அவர் கூறியுள்ளார்.
ஆயுத வெடி சம்பவங்களால் ஏற்படும் தீயை வான் மார்க்கம் ஊடாகவே கட்டுப்படுத்த முடியும் என்ற போதிலும் அதற்கான திறன் இலங்கை இராணுவத்திடம் இல்லை எனவும் அமெரிக்க இராணுவத்திடம் மாத்திரமே அந்த வசதிகள் காணப்படுவதாகவும் அவர் சுட்டிக்காட்டினார்.
இதேவேளை நாடளாவிய ரீதியிலுள்ள ஆயுதக் களஞ்சியசாலைகளில் மேற்கொள்ளப்பட்ட பாதுகாப்பு நடவடிக்கைகள் குறித்து பாதுகாப்பு செயலாளர் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சியிடம் கேள்வி எழுப்பட்டது.
இதற்கு பதில் அளித்த பாதுகாப்பு செயலாளர், சாலாவ முகாமில் ஏற்பட்டதைப் போன்ற சம்பவம் மற்றுமொருமுறை இடம்பெறாமல் இருப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளதாகவும் பாதுகாப்பு காரணங்களுக்காக எவ்வாறான நடவடிக்கை எடுக்கப்பட்டுளது என்பதை கூற முடியாது எனவும் தெரிவித்துள்ளதாக சண்டே லீடர் பத்திரிகை செய்தி வெளியிட்டுள்ளது.
அத்துடன் சன நெரிசல் மிக்க பகுதியிலுள்ள ஆயுதக் களஞ்சியங்களை சனநெரிசல் அற்ற பகுதிக்கு மாற்றுவதற்கு நடவடிக்ககை எடுக்கப்பட்டுள்ளதாகவும் கருணாசேன ஹெட்டிஆராய்ச்சி கூறியுள்ளார்.
இதனிடையே இலங்கையில் அனைத்து ஆயுதங்களும் சர்வதேச தரங்களுக்கு அமைய களஞ்சியப்படுத்தப்பட்டுள்ளமை இதுவரை உறுதி செய்யப்படவில்லை என நம்பகமான இராணுவ தரப்பு தகவல்கள் தெரிவிப்பதாக சண்டே லீடர் பத்திரிகை மேலும் கூறியுள்ளது.

No comments:
Post a Comment