July 4, 2016

பதின் மூன்று வயதுடைய சிறுமி மீது பாலியல் சேட்டை!

பதின்மூன்று வயது சிறுமியொருவருக்கு பாலியல் ரீதியில் கை வைத்த முதியவர் ஒருவரை இம்மாதம் 7ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்குமாறு கந்தளாய் நீதிமன்ற நீதிவான் எச்.ஜி.தம்மிக்க திங்கட்கிழமை உத்தரவிட்டார்.

கடவத்தை,கொணஹின்ன, பகுதியைச் சேர்ந்த 67 வயதுடைய ஒருவரே விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளனர்.
குறித்த சந்தேகநபர் கடவத்தைப் பகுதியிலிருந்து தனது அக்காவின் வீட்டுக்கு கந்தளாய் 93ஆம் கட்டைப் பகுதிக்கு வந்திருந்த நிலையிலே, அயல் வீட்டு பதின் மூன்று வயதுடைய சிறுமிக்கு பாலியல் ரீதியில் கை வைத்ததாக பொலிஸில் முறைப்பாடு செய்யப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபரை இன்று கந்தளாய் நீதிமன்ற நீதிவான் முன்னிலையில் ஆஜர்படுத்திய போதே விளக்கமறியலில் வைக்குமாறு நீதிவான் உத்தரவிட்டார்.
சம்பவம் பற்றிய மேலதிக விசாரணைகளை கந்தளாய் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.

No comments:

Post a Comment