July 23, 2016

விசாரணைப் பொறிமுறைமை குறித்து புலம்பெயர் சமூகத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக குற்றச்சாட்டு!

பொறுப்பு கூறுதல்கள் தொடர்பிலான விசாரணைப் பொறிமுறைமை குறித்து புலம்பெயர் சமூகத்திடம் ஆலோசனை கோரப்பட்டுள்ளதாக கூட்டு எதிர்க்கட்சி குற்றம் சுமத்தியுள்ளது.


கூட்டு எதிர்க்கட்சியின் தலைவர் தினேஸ் குணவர்தன பாராளுமன்றில் இன்றைய தினம் இதனைத் தெரிவித்துள்ளார்.

பாராளுமன்றிற்கு அறிவிக்காமல் விசாரணைப் பொறிமுறைமை குறித்து வெளிநாடுகளில் வாழும் புலம் பெயர் சமூகத்தின் பரிந்துரைகள் கோரப்படுவதாக தெரிவித்துள்ளார்.

வெளிநாட்டு நீதவான்கள் விசாரணைப் பொறிமுறைமையில் இணைத்தக்கொள்ளப்பட மாட்டார்கள் என ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன திட்டவட்டமாக அறிவித்துள்ள நிலையில் வெளிவிவகார அமைச்சர் இவ்வாறு கருத்து கோருவது நியாயமாகும் என அவர் கேள்வி எழுப்பியுள்ளார்.

அமெரிக்காவிற்கான இலங்கைத் தூதரகத்தில் இது தொடர்பிலான அறிவிப்பு வெளியிடப்பட்டுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment