இலங்கையில் பல வருட காலமாக புரையோடிப் போயுள்ள இனப்பிரச்சினைக்கு நிரந்தர தீர்வு காணப்பட்டால், ஏனைய பிரச்சினைகள் தானாக அல்லது சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்ந்துவிடுமென தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினரான என்.ஸ்ரீநேசன் தெரிவித்துள்ளார்.
ஏறாவூர் கலைமகள் மகா வித்தியாலயத்தில் இன்று (திங்கட்கிழமை) நடைபெற்ற, கலைமகள் சாதனையாளர் விழாவில், குறித்த பாடசாலையில் கல்விகற்று பல்கலைக்கழகம், ஆசிரியர் கலாசாலை, கல்வியியற் கல்லூரி ஆகியவற்றில் உயர் கல்வியை முடித்துக்கொண்ட 35 பேர் கௌரவிக்கப்பட்டு பரிசில்களும் வழங்கிவைக்கப்பட்டன.
பாடசாலையின் பிரதி அதிபர் என்.இராஜதுரை தலைமையில் இடம்பெற்ற இந்நிகழ்வில், பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றியபோதே ஸ்ரீநேசன் மேற்குறித்தவாறு தெரிவித்தார். இதன்போது அவர் தொடர்ந்து உரையாற்றுகையில்-
‘இலங்கை அரசியலில் இலஞ்சம், ஏமாற்று, பித்தலாட்டம், உழைப்பதற்காக அரசியலை பயன்படுத்துவது போன்ற நிலைமைகள்தான் மலிந்து கிடக்கின்றன. இந்த பண்புகளைக் கொண்டுள்ள அரசியல்வாதிகள், தங்களை உத்தமர்களாகவும் காட்டிக்கொள்கின்றார்கள். ஆகவே, இலங்கை அரசியலில் எனக்கு உடன்பாடில்லை. எப்படியிருந்தாலும், இத்தகைய இழி அரசியல் கலாசாரங்களுக்கூடாக நல்லதைச் செய்து தூய்மைப்படுத்த வேண்டும் என்பதே எனது அவா.
மேலும், இனப்பிரச்சினை தீர்க்கப்பட வேண்டும் என்பதில் எமது தலைவர் இரா.சம்பந்தன் ஐயா முன்னின்று உழைத்துக் கொண்டிருக்கின்றார். இனப்பிரச்சினைக்கு தீர்வு கிடைக்குமென்ற நம்பிக்கை, சர்வதேச ரீதியிலும் தேசிய மட்டத்திலும் இப்பொழுது துளிர்விட ஆரம்பித்திருக்கின்றது. நீண்டகாலமாக புரையோடிப்போயிருக்கின்ற இலங்கையின் இனப்பிரச்சினை தீர்க்கப்பட்டால், எம்மைச் சூழ்ந்திருக்கின்ற மற்றைய பிரச்சினைகள் தானாக அல்லது சிறு பிரயத்தனங்களின் மூலம் தீர்க்கப்பட்டுவிடும்.
அந்த சந்தர்ப்பத்தை நாம் அடையும்போது, பாடசாலைகள் எதிர்கொள்கின்ற அனைத்துப் பிரச்சினைகளும்கூட தீர்ந்துவிடும். ஆயினும், பாடசாலைகள் எதிர்கொள்கின்ற பிரச்சினைகளை நிர்வாக மட்டத்திலும், அந்தந்த பிரதேசங்களின் பாடசாலை சமூகமட்டத்திலும் தீர்த்துக்கொள்ளக்கூடிய ஒரு முன்மாதிரியான நிலைமையை நாம் அடைந்துகொள்ள வேண்டும்’ என்றார்.
இந்நிகழ்வில் பாடசாலை அதிபர் எஸ்.தில்லைநாதன் உட்பட பாடசாலை அபிவிருத்திச் சங்கத்தினர், பழைய மாணவர்கள், ஆசிரியர்கள், பெற்றோர் என பலரும் கலந்துகொண்டனர்.

No comments:
Post a Comment