யாழ்.சுன்னாகம் நிலத்தடி நீர் மாசு தொடர்பில் ஆராய்வதற்காக வடமாகாண சபையினால் நியமிக்கப்பட்ட நிபுணர்குழு புவிச்சரிதவியல் நிலைமைகளை படமாக்குவதற்கான ரேடார் தொழில் நுட்பத்தைக் கொண்டு இன்றைய தினம் ஆய்வு ஒன்றை நடத்தியுள்ளதுடன், குறித்த ஆய்வு நாளைய தினமும் நடத்தப்படவிருக்கின்றது.
கட்டிடங்கள் ஆராய்ச்சி நிறுவனத்திடம் நிபுணர் குழு மற்றும் மாகாண விவசாய அமைச்சர் பொ.ஐங்கரநேசன் ஆகியோர் விடுத்த கோரிக்கைக்கு அமைவாக இந்த ஆய்வினை நோர்வே நாட்டின் ஒத்துழைப்புடன் உபகரணங்கள் வருவிக்கப்பட்டு மேற்கொள்ளப்பட்டுள்ளது.
இந்த ஆய்வு இன்றைய தினம் காலை தொடக்கம் மாலை 6.30 மணிவரையில் இடம்பெற்றிருந்தது.
இன்றைய ஆய்வில் GPR ஆய்வு மற்றும் றெஜிஸ்ரிவிற்றி சேவயர் ஆகிய ஆய்வுகள் மேற்கொள்ளப்பட்டிருக்கின்றன. இதன் ஊடாக நிலத்தின் கீழ் உள்ள மண் அமைப்புக்கள், பாறைகளின் அமைப்புக்கள், நிலக்கீழ் சுரங்கங்கள் தொடர்பான படங்களை பெற்றுக்கொள்ள முடியும்.
இந்த ரேடார்கள் நிலத்தின் கீழ் 120மீற்றர் ஆழம் வரையில் சென்று ஆய்வுகளை மேற்கொண்டு படங்களை எடுக்கும். இந்த ஆய்வின் பயனாக நிலத்தின் கீழ் கழிவு எண்ணை துளையிட்டு விடப்பட்டதா? எண்ணை படிமங்கள் காணப்படுகின்றனவா என்பதை கண்டறிந்து கொண்ண முடியும்.
மேலதிகமாக அவ்வாறு இருந்தால் அதன் ஊடாக மண் மாதிரிகள் மற்றும் நீர் மாதிரிகளையும் பெற்றுக் கொள்ளலாம். இதற்கமைய சுன்னாகம் மின் நிலையத்தினை சுற்றியுள்ள பகுதிகளை 400 மீற்றர் இன்றைய தினம் ஆய்வு மேற்கொண்டிருக்கின்றோம்.
மேலதிகமாக நாளைய தினமும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவிருக்கின்றன. இதேபோன்று நிலாவரை கிணற்றினை சுற்றியும் ஆய்வுகள் மேற்கொள்ளப்படவுள்ளது.
அதன் கீழ் உள்ள பாறைகள் மற்றும் நீர் தொடுகைகள் தொடர்பாக அறிவதற்கே இந்த ஆய்வு மேற்கொள்ளப்படவுள்ளது என நிபுணர் குழுவின் சார்பில் யாழ்.பல்கலைக்கழக திட்டமிடல் விரிவுரையாளர் செ.ரவீந்திரன் தெரிவித்தார்.
No comments:
Post a Comment