April 19, 2015

திசை எட்டும் படர்ந்திருக்கும் எம்தமிழ் உறவுகளின் உறவுப்பாலமாக ஒலியலை ஊடாக உலக ஊடகப்பரப்பில் தமிழர்சார் TTN.!

எட்டும் படர்ந்திருக்கும் எம்தமிழ் உறவுகளின் உறவுப்பாலமாக ஒலியலை ஊடாக உலக ஊடகப்பரப்பில் தமிழர்சார்தமிழ்த்தொலைக்காட்சி இணையம்
வாழ்த்துச்செய்தி.

அன்புடையீர்,

திசை எட்டும் படர்ந்திருக்கும் எம்தமிழ் உறவுகளின் உறவுப்பாலமாக ஒலியலை ஊடாக உலக ஊடகப்பரப்பில் தமிழர்சார் விடயங்களை உடனுக்குடன் வெளிப்படுத்திய அனைத்துலக ஒலிபரப்புக் கூட்டுத்தாபனம் தமிழ், ஊடக உலகில் புதிய பரிமாணம் என்னும் தாரகை மந்திரம் தாங்கி, மீண்டும் பெரு வெளிச்சமாக மிளிர இருப்பதையொட்டி, தமிழின அடையாளங்களில் ஒன்றான தரணியெங்கும் தமிழர்களின் பிம்பமாக பயணிக்கும் TTN - தமிழ்த்தொலைக்காட்சி இணையம் ஆகிய நாம் மட்டற்ற மகிழ்ச்சியடைகின்றோம்.

முள்ளிவாய்க்கால் வரை, தனது தார்மீகக்கடமைகளை உறுதியாக நிறைவேற்றி, தனது கடமைகளுக்காக பல ஊடகவியலாளர்களையும் இழந்த ஐபிசி தமிழ், தனது சேவைகளை விரிவாக்கம் செய்து புத்துயிர் பெறுவதையொட்டி மன மகிழ்ச்சி அடைவதோடு அணிதிரண்டிருக்கும் ஊடக திறநாளிகளுடன் ஆரம்பிக்கும் தொலைக்காட்சி, வானொலி, இணைய சேவைகளானது, தமிழரின் தனித்துவத்தினையும், திறமைகளையும் உலக ஊடகப்பரப்பில் நிலைநாட்டும் என்ற மாறாத நம்பிக்கையுடன் TTN -
தமிழ்த்தொலைக்காட்சி இணையம் ஆகிய நாம் வாழ்த்துகின்றோம்.

நன்றி

TTN - தமிழ்த்தொலைக்காட்சி இணையம்

No comments:

Post a Comment