1971 ஆம் ஆண்டு ஓர் அரசியல் கைதியாக தான் சிறையிடப்பட்டிருந்த மட்டக்களப்பு சிறைச்சாலையின் சிறைக்கூடத்தை ஜனாதிபதி மைத்ரிபால சிறிசேன பார்வையிட்டார்.
இன்று பிற்பகல் ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன இந்த சிறைச்சாலையை பார்வையிட்டுள்ளார்.
பாடசாலை மாணவராக இருந்த போது செயற்பாட்டு அரசியலில் ஈடுபடுதல் மற்றும் இடதுசாரி அரசியல் கொள்கையுடைய ஒருவராக விளங்கியமை ஆகிய காரணங்களுக்காக 1971 ஆம் ஆண்டு புரட்சியுடன் எந்தவித தொடர்பினையும் கொண்டிராத போதும் மைத்ரிபால சிறிசேனவுக்கு சிறைவாசம் அனுபவிக்க நேர்ந்தது.
மட்டக்களப்பு விளையாட்டுத் தொகுதியை திறந்து வைக்கும் நிகழ்வில் இன்று பிற்பகல் கலந்து கொண்ட ஜனாதிபதி, தனது இறந்தகால அனுபவங்களை நினைவுகூருமுகமாக மட்டக்களப்பு சிறைச்சாலையில் மேற்பார்வை விஜயம் மேற்கொண்டார்.
அமைச்சர்கள் மற்றும் பாராளுமன்ற உறுப்பினர்கள் சிலரும் ஜனாதிபதி அவர்களுடன் இந்நிகழ்வில் கலந்து கொண்டமை குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment