யாழ்ப்பாணக் குடாநாட்டின் பாதுகாப்பு எந்த வகையிலும் குறைக்கப்படவில்லை என்று, யாழ். படைகளின் தலைமையக கட்டளைத் தளபதி மேஜர் ஜெனரல் மகேஸ் சேனநாயக்க தெரிவித்துள்ளார்.
யாழ்ப்பாணத்தில், இராணுவ முகாம்களின் எண்ணிக்கையோ, இராணுவத்தினரின் எண்ணிக்கையோ குறைக்கப்படவில்லை.
பொதுமக்களின் பாதுகாப்புக்குத் தேவையான இடங்களில் மாத்திரம் இராணுவ முகாம்கள் தற்போது பேணப்பட்டு வருகின்றன.
அண்மையில் படையினர் வசமிருந்த காணிகள் உரிமையாளர்களிடம் மீள ஒப்படைக்கப்பட்டதால், இராணுவ முகாம்கள் கைவிடப்பட்டதாக அர்த்தமில்லை.
இராணுவ முகாம்கள் அங்கேயே இருக்கின்றன. ஆனால், இராணுவத்துக்குத் தேவைப்படாத காணிகளே பொதுமக்களிடம் ஒப்படைக்கப்பட்டன.
எனவே யாரும், தேவையற்ற அச்சம் கொள்ள வேண்டியதில்லை.
தேவைக்கேற்ப ஐந்து அல்லது பத்து ஆண்டுகளுக்குப் பின்னர், அரசாங்கம் ஒரு ஆய்வை மேற்கொண்டு, இதுபற்றி முடிவை எடுக்கும்.” என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:
Post a Comment