முல்லைத்தீவில் தொடரும் சிங்கள மயம் மற்றும் இராணுவ மயத்தின் மற்றுமோர் பிரதேசமாக ஏ.9 வீதியும் விரைவில் சிங்கள மயமாகுமா என்ற அச்சம் வெளியிடப்படுகின்றது.
வட மாகாணத்தின் முல்லைத்தீவு மாவட்டமானது தென் முனையூடாக சிங்களக் குடியேற்றம் , சிங்களப் பண்ணை என ஆக்கிரமிக்கப் பட்டுள்ளதோடு கடற்கரை சிங்கள மீனவர்களால் ஆக்கிரமிக்கப்பட்ட வண்ணம் உள்ளது.
இதேபோன்று மாவட்டத்தின் வளப் பிரதேசங்கள் இராணுவ முகாம் எனவும் விகாரைகள் எனவும் ஆக்கிரமிப்பு தொடர்ந்த வண்ணமேயுள்ளது.
இதேவேளை ஏ 9 வீதியில் கிழக்கு திசையில் கொக்காவில் முதல் முறிகண்டி வரையில் சுமார் 6 கிலோமீற்றர் நீளமான இடப்பரப்பில் உள்ள காட்டுப் பிரதேசத்தினையும் முறிகண்டியில் உள்ள சிவநகர் கிராமத்தில் உள்ள மக்கள் குடியிருப்பினையும் இணைத்து ஆக்கிரமித்துள்ள இராணுவத்தின் 2 ஆயிரம் ஏக்கருக்கும் மேற்பட்ட நிலத்திணை ஆக்கிரமித்து முகாமிட்டுள்ளனர் .
இவ்வாறு ஆக்கிரமித்துள்ள பிரதேசம் அமைந்துள்ள வனப்பகுதியின் வீதியோரம் அமைந்துள்ள மேலும் 2 ஆயிரம் ஏக்கர் வரையான வனப்பகுதி முகாமை அண்டியுள்ளமையினால் மாவட்டத்தின் எந்த அபிவிருத்தியிலும் பங்கெடுக்க முடியாதவாறு அச்சுறுத்தல் பிரதேசமாகவே உள்ளது.
இராணுவத்தினரின் முகாமாக அமைந்துள்ள வனப் பகுதிகளிற்கு ஏ 9 வீதியில் இருந்து செல்லும் குறுக்கு வீதிகள் அனைத்தும் மணல் வீதிகளாக காணப்படுகின்ற போதும் முகாமைச் சூழ தார்ப்படுக்கை வீதிகள் அமைக்கப்பட்டு நிரந்தரமாக்கப்பட்டுள்ளது.
அத்துடன் குறித்த முகாமின் பகுதி விஸ்தரிக்கப்படுவதுடன் இம் முகாம்களை அண்டிய பகுதிகளில் சிங்களக் குடயேற்றத்திற்கான முனைப்புக்களும் இடம்பெறுவதனால் ஏ9 வீதியும் சிங்கள மயப்படுத்தலுக்குள்ளாகும் அபாயம் ஏற்பட்டுள்ளதாக குறிப்பிடும் பிரதேச மக்கள் இந்த தொடர் இராணுவ வலயத்தினுள் பல தமிழ் மக்களின் வாழ்விடங்கள் , வாழ்வாதார மையங்கள் , பலவும் ஆக்கிரமிக்கப்பட்டு காட்டினைச் சூழ காவல்அரண்கள் முட்கம்பி வேலிகள் அமைக்கப்பட்டு இப்பிரதேசம் ஆக்கிரமிக்கப் பட்டுள்ள அதேநேரம் இதன் அருகில் அம்பகா மம் பகுதியில் 6 ஆயிரத்து 500 ஏக்கரும் கிளிநொச்சி இரணைமடுப்பகுதியில் 2 ஆயிரம் ஏக்கருமென தொடர் ஆக்கிரமிப்பு வலயங்களாகவே காணப்படுவதனால் எதிர்காலத்தில் குறித்த வலயங்கள் நிரந்தர சிங்கள மயமாகுமா என கேள்வி எழுப்புகின்றனர்.

No comments:
Post a Comment