முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரி அருகில் உள்ள வளவினுள் ஆயுதங்கள் புதைத்து வைத்திருப்பதாக கிடைக்கப்பெற்ற தகவலின் பிரகாரம் நீதிமன்ற அனுமதியுடன் குறித்த பிரதேசம் கனரக வாகனம் கொண்டு இராணுவத்தினரால் தோண்டப்பட்டது.
இது தொடர்பில் மேலும் தெரிய வருவது ,
முல்லைத்தீவு மாவட்டம் வித்தியானந்தாக் கல்லூரிக்கு அருகில் உள்ள ஓர் தனியார் வீட்டு வளவினுள் இரகசிய ஆயுதங்கள் புதைத்து வைக்கக்பட்டுள்ளதாக புலனாய்வுப் பிரிவினருக்கு கிடைத்த தகவலின் பிரகாரம் குறித்த இடத்தினை தோன்டுவதற்கு முல்லைத்தீவு நீதவானிடம் அனுமதிபெறப்பட்டது.
இதன்பிரகாரம் நீதவான் முன்னிலையில் நேற்று மாலையில் பைக்கோ இயந்திரம் மூலம் குறித்த பிரதேசம் தோண்டப்பட்டது. இவ்வாறு தோண்டப்பட்ட இடத்தில் இருந்து எந்தவகையான பொருட்களும் மீட்கப்படவில்லை.
முல்லைத்தீவு மாவட்டத்தில் வைப்பகத்தின் நகை புதைக்கப்பட்டுள்ளது எனவும் , பின்னர் தர்மபுரம் , விஸ்வமடுப் பகுதிகளில் ஆயுதப் புதைக்கப்பட்டுள்ளதாகவும் கூறி தோண்டப்பட்டபோதும் எந்த இடத்திலும் எப் பொருட்களும் மீட்கப்படவில்லை. என்பதும் குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment