July 4, 2016

விழிப்பு நிலையில் சிறிலங்காவின் புலனாய்வு அமைப்புகள்!

தேசிய பாதுகாப்புத் தொடர்பாக நாட்டின் புலனாய்வுஅமைப்புகள் ஏற்கனவே, விழிப்பு நிலையில் வைக்கப்பட்டுள்ளதாக, சிறிலங்கா பாதுகாப்புச் செயலர் கருணாசேன ஹெற்றியாராச்சி தெரிவித்துள்ளார்.


‘பங்களாதேஸ் தலைநகர் டாக்காவில் இடம்பெற்ற தாக்குதலை அடுத்து, புலனாய்வு அமைப்புகள் விழிப்பு நிலையில் வைக்கப்படவில்லை.

தேசிய பாதுகாப்பு விடயத்தில் புலனாய்வு அமைப்புகளும், பாதுகாப்புப் படைகளும், தொடர்ச்சியாக விழிப்பு நிலையிலேயே வைக்கப்பட்டுள்ளன.

பாதுகாப்புப் படைகள் மற்றும் புலனாய்வுச் சேவைகளின் மூலம் திரட்டப்படும் தகவல்களின் மூலம் உண்மைகளை படைத் தலைமைகளால் அறிந்து கொள்ள முடியும்’ என்றும் அவர் தெரிவித்துள்ளார்.

No comments:

Post a Comment