July 4, 2016

மாணவர் துஷ்பிரயோகம் - யாழில் 4 ஆசிரியர்களுக்கு விளக்கமறியல் நீடிப்பு!

யாழ். நகருக்கு அண்மித்த பகுதியிலுள்ள பாடசாலை ஒன்றில், மாணவர்கள் பாலியல் துஷ்பிரயோகத்திற்கு உட்படுத்தப்பட்டதாக கூறப்படும் சம்பவம் குறித்து கைதுசெய்யப்பட்ட, நான்கு ஆசிரியர்களையும் விளக்கமறியலில் வைக்க உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது.


இதன்படி, எதிர்வரும் 18ம் திகதி வரை அவர்களை விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதவான் நீதிமன்ற நீதிபதி எஸ்.சசிதரன் உத்தரவிட்டுள்ளார்.

கடந்த மாதம் குறித்த பாடசாலை மாணவர்களை துஷ்பிரயோகம் செய்ய முயற்சித்ததாக கூறி ஆசிரியர்களுக்கு எதிராக, மாணவர்கள் பாரிய போராட்டங்களை முன்னெடுத்தனர்.

இதில், குற்றஞ்சாட்டப்பட்ட ஆசிரியர் மற்றும் குற்றத்தினை மறைத்த குற்றச்சாட்டில், அதிபர் உட்பட ஏனைய இரண்டு ஆசிரியர்களும் யாழ்ப்பாணம் பொலிஸாரால் கைதுசெய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டிருந்தனர்.

குறித்த வழக்கு விசாரணை இன்று திங்கட்கிழமை யாழ். நீதிவான் நீதிமன்றில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்டது.

இதன்போது, 5 பேர் கொண்ட சட்டத்தரணிகள் ஆஜராகியிருந்தனர்.

இதன்படி சந்தேகநபர்கள் நால்வரையும் எதிர்வரும் 18ம் திகதி வரை தொடர்ந்தும் விளக்கமறியலில் வைக்குமாறு யாழ். நீதிவான் நீதிமன்ற நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.

No comments:

Post a Comment