July 4, 2016

ஜோர்ஜ் மாஸ்டர் விசாரணைகளிலிருந்து விடுதலை!

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் மொழிபெயர்ப்பாளர் ஜோர்ஜ் மாஸ்டர் நீதிமன்ற விசாரணைகளிலிருந்து விடுதலை செய்யப்பட்டுள்ளார். கொழும்பு பிரதான நீதவான் கிஹான் பிலபிட்டிய இந்த உத்தரவினை பிறப்பித்துள்ளார்.



சட்ட மா அதிபரின் பணிப்புரைக்கு அமைய இந்த தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது. எவ்வாறெனினும் தமிழீழ விடுதலைப் புலிகளின் ஊடகப் பேச்சாளராக கடமையாற்றிய தயா மாஸ்டர் தெடர்பில் எவ்விதமான தீர்மானமும் எடுக்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.


தயாமாஸ்டர் தொடர்பில் எதிர்வரும் டிசம்பர் மாதம் 5ம் திகதி விசாரணைகள் நடத்தப்பட உள்ளன. இறுதிக் கட்ட யுத்தத்தின் போது தயா மாஸ்டர் மற்றும் ஜோர்ஸ் மாஸ்டர் ஆகியோர் படையினரிடம் சரணடைந்திருந்தனர். அவர்கள் இருவரும் சமூகத்துடன் மீள இணைக்கப்பட்டிருந்தார்கள் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment