July 5, 2016

வடக்கின் வசந்தம் என்னும் பெயரில் மகிந்த காலத்தில் 2010ல் நாட்டப்பட்ட அடிக்கல்லின் தொழிற்சாலை இன்று வரை ஆரம்ப கட்டப்பணியைக் கூட நிறைவு செய்யாத நிலையில் …!

கிளிநொச்சி மாவட்டத்தில் வடக்கின் வசந்தம் என்னும் பெயரில் மகிந்த காலத்தில் 2010ல் நாட்டப்பட்ட அடிக்கல்லின் தொழிற்சாலை இன்று வரை ஆரம்ப கட்டப்பணியைக் கூட நிறைவு செய்யாத நிலையில் உள்ளது.


2010-12-21 அன்று தெங்கு அபிவிருத்தி அதிகாரசபையின் தலைவர் சுகத் ஹதுங்கே அழைப்பில் அப்போதைய ஆளுநர் , நாடாளுமன்ற உறுப்பினர் நாமல் ராஜபக்சா ஆகியோருடன் தெங்கு அபிவிருத்தி அமைச்சர் ஏ.பி. ஜகத் புஸ்பகுமார தலமையில் ஏ9 வீதியில் கிளிநொச்சி மாவட்டம் 55ம் கட்டைப்பகுதியில் மாவட்ட மக்களின் வாழ்வாதார நலனிற்காக எனக்கூறி ஓர் தேங்காய் எண்ணைய் தொழிற்சாலைக்கான அடிக்கல் நாட்டப்பட்டது.

தெங்கு கைத்தொழில் மேம்பாட்டிற்கான ஒரு அம்சமாக கொள்ளப்பட்ட இவ் அபிவிருத்தித் திட்டம் வடக்கில் ஆரம்பிப்பதாக பெரும் எடுப்பில் விழா எடுக்கப்பட்டபோதிலும் இன்று 6 வருடம் ஆகி விட்ட நிலையிலும் அந்த வசந்தம்  இம் மாவட்ட மக்களிற்கு வீசவேயில்லை எனச் சுட்டிக்காட்டப்படுகின்றது.

தேர்தலுக்காக வடக்கு மக்களை ஏமாற்றிய. ஓர் வடக்கின் வசந்த திட்டங்களில் இதுவும் ஒன்று எனக் கூறும் கிரா ம  மக்கள் இவ் அடிக்கல் நாட்டப்பட்டும் சுமார் 5 வருடகாலம் ஆட்சியில் இருந்த மகிந்த இறுதி வரை இத்திட்டத்தைக்கூட நிறைவேற்றித் தரவில்லை என்பதனால் குறித்த நினைவுக்கல்லை அகற்றி மகிந்தவிற்கே பரிசாக கொடுக்கவேண்டும் என்கின்றனர் பிரதேச மக்கள்.

No comments:

Post a Comment