July 23, 2016

அரிப்பு அல்லிராணிக்கோ ட்டையை அண்மித்த கடற்கரை பகுதியில் 1 கோடி 39 இலட்சம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சப்பொதிகள் மீட்பு !

முசலி பிரதேசச் செயலாளர் பிரிவுக்குற்பட்ட அரிப்பு அல்லிராணிக்கோ ட்டையை அண்மித்த கடற்கரை பகுதியில் பதுக்கி வைக்கப்பட்டிருந்த நிலையில் சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் பெறுமதியான கேரளா கஞ்சப்பொதிகளை
இன்று (23) சனிக்கிழமை காலை மீட்டுள்ளதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தெரிவித்தார்.

மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவிற்கு கிடைக்கப்பெற்ற இரகசியத்தகவலையடுத்து மன்னார் மாவட்ட பொலிஸ் அத்தியட்சகர் சியந்த பீரிஸ் அவர்களின் ஆலோசனைக்கு அமைவாகவும்,மன்னார் பொலிஸ் நிலையத்தின் தலைமையக பொறுப்பதிகாரி அஜந்த றொற்றிகோ அவர்களின் வழி நடத்தலில் கீழ் மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் தலைமையில் சென்ற பொலிஸ் பிரிவினரே சிலாபத்துறை கடற்படை கட்டளைத்தளபதி ஜீ.யாசிங்க அவர்களின் உதவியுடன்  குறித்த கேரளா கஞ்சாப்பொதிகளை மீட்டுள்ளனர்.

-அரிப்பு அல்லிராணிக்கோட்டையை அண்மித்த கடற்கரைப்பகுதியை பொலிஸார் மேற்கொண்ட தேடுதல் நடவடிக்கைகளின் போது 5 மூடைகளில் பொதி செய்யப்பட்ட கேரளா கஞ்சா பொதிகள் மீட்கப்பட்டது.

139 கிலோ 500 கிராம் எடை கொண்ட குறித்த கஞ்சாப்பொதியின் பெறுமதி சுமார் 1 கோடி 39 இலட்சத்து 50 ஆயிரம் ரூபாய் என தெரிய வந்துள்ளது.
-மீட்கப்பட்ட கேரளா கஞ்சாப்பொதிகள் தற்போது மன்னார் பொலிஸ் நிலையத்தின் போதைப்பொருள் தடுப்பு பிரிவில் வைக்கப்பட்டுள்ளது.குறித்த கஞ்சாப்பொதிகள் இந்தியாவில் இருந்து கொண்டுவரப்பட்ட நிலையில் பதுக்கி வைக்கப்பட்டிருக்கலாம் என தெரிய வருகின்றது.சந்தேக நபர்கள் எவரும் கைது செய்யப்படவில்லை.

மேலதிக விசாரனைகளை பொலிஸார் மேற்கொண்டு வருவதாக மன்னார் மாவட்ட போதைப்பொருள் தடுப்பு பிரிவு பொறுப்பதிகாரி உப பொலிஸ் பரிசோதகர் உதய குமாரசிங்கம் கௌசிகன் மேலும் தெரிவித்தார்.






No comments:

Post a Comment