June 4, 2015

பிரான்ஸ் பாடுமீன் சங்கத்தினால் அம்பாறையில் க.பொ.த சாதாரண தர மாணவர்களுக்கான இலவச வகுப்புக்கள் ஆரம்பம் !

பிரான்ஸ் பாடுமீன் சங்கத்தினால் ஆரம்பிக்கப்பட்ட க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றவிருக்கும் மாணவர்களுக்கான இலவச மேலதிக கணித விஞ்ஞான பாடங்களுக்கான வகுப்புக்கள் திருக்கோவில் வலய கல்விப்பணிப்பாளர் இ.சுகிர்தராஜன் மற்றும் பொத்துவில் கோட்ட
கல்விப்பணிப்பாளர் வ.ஜயந்தன் மற்றும் அச் சங்கத்தின் பணிப்பாளர்களுள் ஒருவரான த.அருண்பிரதீஸ் ஆகியோர் தலைமையில் நேற்று புதன்கிழமை ( 03) இடம்பெற்றது
இந் நிகழ்வில் திருக்கோவில் வலய பொத்துவில் மெதடிஸ் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் கோமாரி மெதடிஸ் சென் தமிழ் மகா வித்தியாலயம் மற்றும் தாண்டியடி விக்னேஸ்வரா மகாவித்தியாலயம் போன்ற பாடசாலைகளில் க.பொ.த சாதாரண தர பரீட்சைக்கு தோற்றும் மாணவர்களின் சித்தி அடையும் வீதத்தினை அதிகரிக்கம் நோக்கத்துடனும் மேலதிக வகுப்புக்களுக்குச் சென்று கல்வி கற்பதற்கு வசதி குறைந்த மாணவர்களும் மேலதிக கல்வி வசதிகளை பெற்றுக்கொள்ள வேண்டிய நோக்கம் கருதியும் இந்த இலவச வகுப்புக்கள் ஆரம்பமாகி உள்ளன.
இந்த நிகழ்வு வெற்றிகரமாக அமைந்தது என கருதுவதற்கு ஆதாரமாக மாணவர்கள் மற்றும் பெற்றோர்களின் முழு ஆதரவும் ஒத்துழைப்பும் முக்கியமாக அவர்களின் அதிகமான வரவும் காணப்பட்டது. இதன்போது பெற்றோர்கள் தாமாகவே முன்வந்து தமது பிள்ளைகளின் மேம்பாடு கருதி மேற்கொண்ட இச் செயற்பாட்டிற்கு நன்றியளிக்கும் விதமாக தமது பிள்ளைகளை எந்நிலையிலும் முழுமையாக கல்வியில் ஈடுபட செய்து அவர்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்துவதாக உறுதிமொழியும் அளித்தனர் அத்துடன் கிழக்கு மாகாணத்தின் எல்லை பிரதேசத்தில் அமைந்துள்ள பின்தங்கிய எங்களது கிராமங்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்தும் நோக்கில் புலம்பெயர் அமைப்பான பிரான்ஸ் பாடுமீன் சங்கம் முன்வந்ததையிட்டு மகிழ்ச்சி அடைகிறோம்.
இதே போன்று எமது புலம்பெயர் உறவுகள் பின் தங்கிய கிராமங்களின் கல்வி வளர்ச்சியை மேம்படுத்த முன்வரவேண்டும் என அம்பாறை மாவட்ட மக்கள் சார்பாக கேட்டுக்கொள்கிறோம் என தெரிவித்தனர் .
paadumeen france (1)
paadumeen france (2)
paadumeen france (3)
paadumeen france (4)
paadumeen france (5)
paadumeen france (6)

No comments:

Post a Comment