June 5, 2015

தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் முதற் தற்கொடை போராளி - பொன் சிவகுமாரன். !

இனவெறியாலும், அடக்குமுறைகளாலும் மனங்கொதித்த தமிழ் இளைஞர்கள் 1970 ஆம் ஆண்டு யாழ்ப்பாணத்தில் தமிழ் மாணவர் பேரவையை உருவாக்கினர். பேரவையுடன் தன்னை இணைத்துக்கொண்டார் சிவகுமாரன். அறப்போராட்டங்களால் பயனேதும்
ஏற்ப்படப்போவதில்லை என்பதனை உணர்ந்த இளையோர் ஆயுதப்போராட்டத்தை கையிலெடுத்தனர்.
1970 ஆம் ஆண்டு இரண்டாம் முறையாக ஆட்சியை கைப்பற்றிய சிறிமா பண்டாரநாயக்கே தமிழ் இளையோரின் எதிர்காலத்தை சீரழிக்கும் நோக்கோடு கல்வி தரப்படுத்துதல் சட்டத்தை கொண்டுவந்து தமிழ் இளையோரின் உயர்கல்வி கற்கும் உரிமையை பறித்தார். தொடர்ந்த சிங்கள
1970 ஆம் ஆண்டு சிங்கள அமைச்சர் சோமவீர சந்திரசிறீயின் வாகனத்துக்கு வெடி வைத்த வழக்கிலும். 1971 ஆம் ஆண்டு சிங்கள கைக்கூலியான யாழ் மேயர் ஆல்பிரட் துரையப்பாவின் வாகனத்தில் வெடிகுண்டு பொறுத்தி கொலை செய்ய முயன்றதற்காகவும் கைதுசெய்யப்பட்டு, சித்திரவதைகளுக்கு உள்ளாக்கப்பட்டு. இரண்டாண்டுகளுக்கு பின் விடுதலை செய்யப்பட்டார் சிவகுமாரன்.
1974 ஆம் ஆண்டு யாழ் தமிழாராய்ச்சி மாநாட்டில் பொலிசாரால் நிகழ்த்தப்பட்ட படுகொலைகளுக்கு பழி தீர்க்கும் முகமாக துப்பாக்கி பிரயோகத்திற்கு உத்தரவிட்ட சந்திரசேகரவையும், பொலிசாரின் உளவாளியாக செயற்பட்டு தமிழ் இளையோரை காட்டிக்கொடுத்துவந்த நடராசா என்பவரையும் இலக்கு வைத்து செயற்பட்டுக்கொண்டிருந்த வேலை 05 ஜூன் 1974 அன்று சிறிலங்கா பொலிசாரால் சுற்றிவளைக்கப்பட்டபோது எந்த சூழலிலும் இனி உயிருடன் பிடிபடக் கூடாது என்பதில் உறுதியாய் இருந்த சிவகுமாரன் அதற்கென ஒரு மருத்துவரிடமிருந்து தான் முன்பே பெற்றுவைத்திருந்த சயனைடை அருந்தி வீரகாவியமானார்.
தமிழீழ போராட்ட வரலாற்றில் எச்சூழலிலும் எதிரியிடம் மண்டியிடாது தன்மானம் காக்கும் தமிழர் மரபை தோற்றுவித்தளித்தவர், பொன்னுத்துரை சிவகுமாரன்.
எமது இலட்சியத்திற்கு எம்மை ஒப்படைத்திருக்கின்றோம் என்பதன் அடையாளச்சின்னம் தான் 'சயனைட்' இந்த 'சயனைட்' எங்கள் கழுத்தில் தொங்கும்வரை உலகில் எந்தச் சக்திக்கும் நாங்கள் அஞ்சமாட்டோம்.
- தேசியத்தலைவர் மேதகு வே பிரபாகரன்
ஜூன் 5, பொன் சிவகுமாரன் அவர்களின் வீரவணக்க நாள்..!!!

No comments:

Post a Comment