May 17, 2016

யேர்மனியில் தமிழின அழிப்பு நாள் 2016!

முள்ளிவாய்க்கால் வரையான யுத்தகளத்தில் எங்கள் மக்கள் எந்த இலட்சியத்துக்காக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்தார்களோ அந்த இலட்சியத்தை நோக்கிய
பாதையில் எங்கள் பயணம் தொடரும்.முள்ளிவாய்கால் முடிவல்ல. எமது விடுதலைக்காக போராட்டம் தொடரும். அதற்காக தமது உயிர்களை கொடுத்தோரை தொடர்ந்து நினைவில் ஏந்துவோம்.
அவ்வகையில் யேர்மனியில் தமிழின அழிப்புக்கு நீதி கோரி Düsseldorf மாநகர சபையை நோக்கிய பேரணியும் அத்தோடு தமிழின அழிப்பு வாரத்தில் நகரங்கள் வாரியாக பல்வேறுநினைவேந்தல் மற்றும் நீதி கோரும் நிகழ்வுகளும் நடைபெறவுள்ளது .
அழிவுகளும் அடக்கு முறைகளும் தமிழ் இனத்திற்கு புதிதல்ல. விழ விழ எழுவோம். முள்ளிவாய்க்கால் விடுதலைப் போரின் முடிவல்ல அதுவே ஆரம்பம் என்பதை எடுத்துரைப்போம், பேரணியாய் ஓரணியில் வாருங்கள்.இப்பேரணியில் யேர்மனியில் உள்ள பொது அமைப்புக்கள், மனித உரிமை ஆர்வலர்கள், உள்ளூர் சங்கங்கள் , கோயில்கள் , பாடசாலைகள் அனைவரின் ஆதரவையும் எதிர்பார்க்கின்றோம்.
கண்டனப் பேரணி
காலம் :18.05.2016
இடம் : Düsseldorf Hauptbahnhof (யேர்மனி )
நேரம் : 14:00 மணிக்கு
நினைவு வணக்க நிகழ்வு
காலம் :18.05.2016
இடம் : Platz des Landtags
Düsseldorf (யேர்மனி )
நேரம் : 16:30 மணிக்கு


No comments:

Post a Comment