August 21, 2016

தமிழீழத்தில் இதற்கு என்ன தண்டனை தெரியுமா….?

அண்மையில் நாட்டில் பாலியல் துஸ்பிரயோகங்கள் அதிகரித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது. அவ்வாறு பாலியல் குற்றங்களை செய்தவர்களுக்கு ஆண்டுகள் சில கடந்தும் தக்க தண்டனைகள் வழங்காது வழக்குகள் நீண்டுகொண்டே போகின்றன.

அந்த வகையில் நாட்டில் குறிப்பாக வடக்கு கிழக்கில் பாலியல் துஸ்பிரயோகங்களுக்கு உள்ளாக்கப்பட்டு துன்பத்தில் அல்லலுறுபவர்களைப் பார்த்து தமிழீழ உணர்வுள்ள மக்கள் என்ன சொல்கிறார்கள்…. விடுதலைப் புலிகள் இருக்கும் காலத்தில் எப்படியெல்லாம் நம் பெண்ணினம் நடமாடினார்கள்…

ஆனால் இப்போதோ சிறு வயது குழந்தை முதல் முதிய கிழவி வரை பாலியலுக்குள்ளாக்கப்படுகிறார்களே… என்ன கொடுமை என விடுதலைப் புலிகளின் காலத்தை மீட்டிப் பார்க்கின்றனர்.

அந்த வகையில் பாலியல் குற்றத்திற்கு தமிழீழ சட்டம் என்ன சொல்கிறது என பார்ப்போமானால்……

பாலியல் வன்முறை

வரைவிலக்கணம் :- பின்வரும் 5 வித சூழ்நிலைகளில் ஏதாவது ஒன்றின்படி ஒரு பெண்னுடன் உடலுறவு கொள்வது பாலியல் வன்முறை எனப்படும்.

1- ஒரு பெண்ணின் விருப்பத்திற்கு மாறாக,
2- அவளுடைய சம்மதத்தைப் பெறாமல்

3-அவளை கொலை புரிவேன், காயப்படுத்துவேன் என அச்சுறுத்தி அதனால் அவளுடைய சம்மதத்தைப் பெற்று

4-தான் அவளுடைய கணவன் அல்லன் என்று தெரிந்திருந்தும் அவளை சட்டப்படி மணமுடித்த கணவன் தானே என்று அவளை நம்பவைத்து அதன் மூலம் அவளுடைய சம்மதத்தைப் பெற்றும், பெறாமலும்,

5-14 வயது பூர்த்தியடையாத பெண்ணின் சம்மதத்தைப் பெற்றும் பெறாமலும்,

மேலும் ஒஆலியல் வன்முறைக் குற்றத்தைப் புரியவென திட்டமிட்டு முன் முயற்சியில் இறங்கியபோதும், ஏதும் ஒரு சூழ்நிலையில் உடல் உறவு நிகழாவிடில் அது பாலியல் வன்முறை எத்தனிப்புக் குற்றமாகக் கருதப்படும்.
இவைக்கான தண்டனைகள் என்னவெனில்.

பாலியல் வன்முறைக் குற்றம் புரிந்தவருக்கு ஆகக் கூடிய தண்டனையாக  மரண தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்முறை எத்தனித்தல் குற்றத்திற்காக ஏழு வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

பாலியல் வன்முறைக் குற்ற உடந்தையாளருக்கு ஐந்து வருட கடூழியச் சிறைத் தண்டனை விதிக்கப்படும்.

இதுவே தான் தமிழீழத்தின் சட்டம்.

ஆனால் இப்போதெல்லாம் இலங்கை சட்டத்தில் பாலியல் குற்றத்திற்கு என்ன தண்டனை கொடுக்கின்றது…… சற்று சிந்திக்க வேண்டியதே… புலிகளின் காலம் அது பெண் விடுதலைக் காலமே……!!!




No comments:

Post a Comment