இடம்பெயர் மக்களின் சொத்துக்களை பாதுகாப்பதற்கு இராணுவப் பாதுகாப்பு வழங்கப்படும் என பிரதமர் ரணில் விக்ரமசிங்க தெரிவித்துள்ளார்.
மழை வெள்ளம் மற்றும் மண் சரிவு காரணமாக பாதிப்புக்களை எதிநோக்கிய மக்களின் சொத்துக்களை பாதுகாக்க நாளை முதல் படையினர் கடமையில் ஈடுபடுத்தப்படுவர் என பிரதமர் தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று நடைபெற்ற விசேட செய்தியாளர் சந்திப்பில் இதனைத் தெரிவித்துள்ளார்.
சொத்துக்கள் களவாடப்பட்டு விடும் என்ற அச்சத்தினால் சிலர் ஆபத்துக்களின் போதும் சொந்த இடங்களை விட்டு வெளியேறாத நிலைமை ஏற்பட்டுள்ளது.
எனினும், எச்சரிக்கை விடுக்கப்படும் போது அந்த இடங்களை விட்டு வெளியே வேண்டும் என தெரிவித்துள்ளார்.
கொழும்பு மற்றும் கம்பஹா மாவட்டங்களில் அதிகளவு வெள்ளப் பாதிப்பு ஏற்பட்டுள்ளது.
வெள்ள அனர்த்தம் ஏற்படும் போது வீடுகளில் தங்கியிருப்பது அபாயகரமானது என அவர் குறிப்பிட்டுள்ளார்.
No comments:
Post a Comment