எமது அமைச்சரவைக்குள்ளேயே ஒரு சிலர் இருந்துகொண்டு அரசாங்க மட்டத் தில் பேசப்படும் விடயங்களை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கிக்கொண்டிருக்கின்றனர். இது
மாபெரும் துரோகமாகும். அந்த அமைச்சருக்கு விரைவில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள் என்று அமைச்சரவைப் பேச்சாளரும் அமைச்சருமான ராஜித சேனாரத்ன தெரிவித்தார்.
கடந்த ஆட்சியாளர்களின் ஊழல் நடவடிக்கையினால் ஏற்பட்டுள்ள நிதி நெருக்கடியை சமாளிக்க எம்மை ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்களிடம் அதிகரித்த வரியை அறவிட்டு நாம் பழிவாங்குகின்றோம். இப்படி மக்களுக்கு தண்டனையை வழங்குவது நியாயமற்றது என்றும் அவர் குறிப்பிட்டார்.
அரசாங்க தகவல் திணைக்களத்தில் நேற்று நடைபெற்ற வாராந்த அமைச்சரவை முடிவுகளை அறிவிக்கும் செய்தியாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து வெளியிடுகையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
இலங்கையில் ஊடகவியலாளர்களும் அர சியல்வாதிகளைப் போன்றே செயற்பட்டு வருகின்றனர். அரசியல்வாதிகளைவிட முன் னாள் ஜனாதிபதியின் அதிகாரியைப் பாதுகாக்கும் தேவை ஊடகவியலாளர்களுக்கு காணப்படுகின்றது. அந்த அதிகாரி காலை ஒன்பது மணிமுதல் மாலை நான்கு மணிவரை வங்கியிலிருந்து பணத்தை மீளப்பெற் றுள்ளார்.
இது தொடர்பில் நிதி குற்றப் புலனாய்வு பிரிவிடம் நாம் முறைப்பாடு செய்தபோது நிதிப்புலனாய்வுப்பிரிவு மத்திய வங்கியின் நிதி விசாரணைப்பிரிவிடம் விசாரித்துள்ளது. அப்போது அங்கிருந்த புலனாய்வு அதிகாரி குறித்த தினத்தில் குறித்த வங்கியிலிருந்து எவ்விதமான பணக்கொடுக்கல் வாங்கலும் இடம்பெறவில்லையெனக் கூறியுள்ளார். அதனால் நிதி குற்றப் புலனாய்வுப் பிரிவு விசாரணைகளை தொடரவில்லை.
இது தொடர்பிலேயே அனைத்துத் தகவ ல்களையும் பெற்றுத் தருமாறு அமைச்சர வைப்பத்திரத்தை சமர்ப்பித்தோம். ஆனால் இந்த விடயத்தை அமைச்சரவைக்குழு கொண்டுவரவேண்டுமென ஜனாதிபதி கூறி னார். எவ்வாறெனினும் நிதி ஊழல்கள் தொடர்பில் தான் மிகவும் அக்கறையுடன் இருப்பதாக ஜனாதிபதி தெரிவித்தார்.
எமது அமைச்சரவைக்குள்ளேயே ஒரு சிலர் இருந்துகொண்டு அரசாங்க மட்டத் தில் பேசப்படும் விடயங்களை முன்னாள் ஜனாதிபதிக்கு வழங்கிக்கொண்டிருக்கின் றார். இது மாபெரும் துரோகமாகும். அந்த அமைச்சருக்கு விரைவில் என்ன நடக்கின்றது என்று பாருங்கள்.
கேள்வி:- அவரின் அமைச்சர் பதவி பறிபோகுமா?
பதில்:- பொறுத்திருந்து பார்ப்போம். காலம் அனைத்திற்கும் பதில் சொல்லும்.
இதேவேளை கடந்த அரசாங்கத்தின் ஆட்சியின் போது அதிகளவு நிதி ஊழல் செய்யப்பட்டுள்ளது. ஆனால் யாரையும் பிடிக்க முடியவில்லை. அப்படியே பிடித்துவிட்டாலும் பிணையில் விடுதலையாகிச் செல்கின்றனர். விடுதலையாகிச் செல்வது மட்டுமன்றி அறிக்கைகளையும் விடுக்கின்றனர். ஆனால் நாங்களோ மாற்ற த்திற்கு வித்திட்ட மக்களையே பழிவாங்கிக் கொண்டிருக்கின்றோம்.
அதாவது கடந்த ஆட்சியாளர்கள் திருடிய பணத்தினால் ஏற்பட்ட நிதி நெரு க்கடியை சமாளிக்க நாம் மக்களிடம் அதிகரித்த வரியை அறவிடுகின்றோம். இதுவொருவகையில் மக்க ளைப் பழிவாங்கும் செயலாகும். வேறுவழியின்றி நாங்கள் இதனை செய்துகொண்டிருக்கின்றோம். எம்மை ஆட்சிக்குக் கொண்டுவந்த மக்களை வரியை அதிகரித்து நாம் பழிவாங்குகின்றோம். இப்படி மக்களுக்கு தண்டனையை வழங்குவது நியாயமற்றது. இந்த விடயத்தில் ஊடகவியலாளர்களும் பொறுப்புடன் நடந்துகொள்ள வேண்டும்.
ஊடகவியலாளர்கள் முன்வந்து விடயங்களை ஆராயவேண்டும். வெளிநாடுகளில் அவ்வாறு தான் இடம்பெறுகின்றது. லசந்த விக்கிரமதுங்க போன்றதொரு ஊடகவிய லாளர் இப்போது நாட்டில் இல்லை. அத னையிட்டு நான் கவலையடைகின்றேன். எங்களால் தனித்து எதனையும் செய்யமுடி யாது. ஊடகவியலாளர்கள் எமக்கு ஒத்து ழைப்பு வழங்கவேண்டும். ஊழல் குற்றச் சாட்டுக்கள் குறித்த விசாரணைகளை துரி தப்படுத்தவே நாங்கள் புதிய சட்டமா அதிபரை நியமித்து அவற்றைப் பொறுப்புக் கொடுத்தோம்.
No comments:
Post a Comment