ஜேர்மனி நாட்டில் 31 வருடங்களுக்கு முன்னர் கற்பழிக்கப்பட்டு கொலை செய்யப்பட்டதாக கருதிய பெண் ஒருவர் உயிருடன் பொலிசார் முன்னிலையில் தோன்றிய சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஜேர்மனியில் உள்ள Braunschweig என்ற நகரில் கடந்த 1984ம் ஆண்டு Petra Pazsitka என்ற 24 வயதுடைய கல்லூரி மாணவி வசித்து வந்துள்ளார்.
இதே ஆண்டில் நடைபெற்ற அவருடைய சகோதரினின் பிறந்த நாளில் பங்கேற்காமல் திடீரென மாயமாக மறைந்துள்ளார்.
புகாரை பெற்ற பொலிசார் காணாமல் போன மாணவியை தீவிரமாக தேடி வந்துள்ளனர்.
இந்நிலையில், 14 வயது சிறுமியை கற்பழித்து கொலை செய்த கொலைகாரன் ஒருவன் ‘பொலிசாரால் தேடப்பட்டு வரும் கல்லூரி மாணவியை தான் கற்பழித்து கொலை செய்துவிட்டதாக’ பொலிசாரிடம் வாக்குமூலம் அளித்துள்ளான்.
தேடப்பட்ட வந்த மாணவி கொலை
செய்யப்பட்டுள்ளதாக வழக்கு பதிவு செய்த பொலிசார், 1989ம் ஆண்டு அந்த வழக்கை மூடியுள்ளனர்.
இந்நிலையில், டசல்டோர்ஃப் நகரிலிருந்து இரண்டு வாரங்களுக்கு முன்னர் பொலிசாருக்கு ஒரு அவசர அழைப்பு வந்துள்ளது.
அதில், தன்னுடைய வீட்டில் கொள்ளை நடந்துள்ளதாக 55 வயதுள்ள Schneider என்ற பெயருடைய பெண் தெரிவித்துள்ளார்.
பொலிசார் உடனடியாக அந்த வீட்டிற்கு சென்று, புகார் தெரிவித்த பெண்ணிடம் வழக்கு பதிவு செய்வது தொடர்பாக அவருடைய ஆவணங்களை கேட்டுள்ளனர்.
அப்போது அந்த பெண் தன்னுடைய உண்மையான பெயர் Petra Pazsitka என்றும், 31 வருடங்களுக்கு முன்னர் கொல்லப்பட்டதாக கூறப்பட்ட கல்லூரி மாணவி நான் தான் என பொலிசாரிடம் ஒப்புக்கொண்டுள்ளார்.
மேலும், தன்னுடைய உறவினர்களுக்கு தெரியாமல் ஒரு அடுக்குமாடி குடியிருப்பை வாடகைக்கு விட்டு இதுவரை 20 ஆயிரம் யூரோ சேர்த்துள்ளதாகவும், இனி எதிர்காலத்திலும் வெளி உலக மக்களுடன் தொடர்பு ஏற்படுத்திக்கொள்ள விரும்பவில்லை என கூறியுள்ளார்.
31 வருடங்களுக்கு முன்னர் கொலை செய்யப்பட்டதாக வழக்கு பதிவு செய்யப்பட்ட பெண் உயிருடன் வந்துள்ளது பொலிசாருக்கு அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ள நிலையில் அவரை கற்பழித்து கொலை செய்ததாக கைது செய்யப்பட்ட அந்த நபர் என்ன ஆனார் என்பது குறித்து பொலிசார் தகவல் எதுவும் வெளியிடவில்லை.
No comments:
Post a Comment