ஏழாலை பகுதியில் வளர்க்கப்படும் ஆடுகள் திருடப்பட்டு வரும் சம்பவங்கள் அதிகரித்துள்ளதாக தமக்கு முறைப்பாடுகள் கிடைக்கப்பெற்றுள்ளதாக சுன்னாகம் பொலிஸார் தெரிவித்தனர். இந்தப் பகுதியில் வசிக்கும் பெண்களை தலைமைத்துவமாகக் கொண்ட குடும்பங்களில் வளர்க்கப்பட்ட 140 ஆடுகள்
திருடப்பட்டு, பாரவூர்தி ஒன்றின் மூலம் ஓமந்தை வழியாக தென்னிலங்கைக்கு கொண்டு செல்லப்படும் போது, மீட்கப்பட்டிருந்தன. இந்நிலையில் கடந்த சனிக்கிழமை (26) அதிகாலை, மோட்டார் சைக்கிளில் வந்த சிலரால் வீடொன்றில் கட்டப்பட்டிருந்த 2 ஆடுகள் திருடப்பட்டுள்ளன. இது தொடர்பில் பொலிஸ் நிலையத்துக்கு அறிவிக்கப்பட்டதையடுத்து, பொலிஸார் ரோந்து நடவடிக்கையை மேற்கொண்ட போதிலும் எவரும் கைது செய்யப்படவில்லை. இது தொடர்பில் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருவதுடன், ரோந்து நடவடிக்கைகளை மேற்கொண்டு வருவதாகவும் பொலிஸார் கூறினர்.

No comments:
Post a Comment