பிரான்ஸ் நாட்டிற்கு செல்வதற்காக கட்டுநாயகா விமான நிலையத்திற்கு தனது 8 வயது மகளுடன் வந்திருந்த போது கைதான பகிரதி முருகேசு விடுவிக்கப்பட்டுள்ளார். பயங்கரவாதத் தடைப்பரிவுப் பொலிசாரினால் கைது செய்யப்பட்ட பொழுது தாயைப் பிரிய மறுத்த பிரான்ஸ் நாட்டின்
குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் காவற்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
குடியுரிமையைக் கொண்ட பகிரதியின் ஒரே மகளும் பயங்கரவாதத் தடைப் காவற்துறையினரால் விடுவிக்கப்பட்டுள்ளார்.
பகிரதி முருகேசு 1991ம் ஆண்டு தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பில் இணைந்து ஆயதப் பயிற்சிகள் பெற்ற பின்னர் 1996ஆம் ஆண்டு பெண் கடற்புலிகளின் தலைவியாகச் செயற்பட்டதாகவும் பின்னர் நாட்டை விட்டு வெளியேறி பிரான்ஸ் நாட்டிற்கு சென்றிருந்த சந்தேகநபரான பகிரதி முருகேசு இலங்கைக்கு வந்து மீண்டும் பிரான்ஸ் நாட்டிற்கு செல்ல கட்டுநாயகா விமான நிலையத்திற்கு வந்த வேளையில் கைது செய்யப்பட்டு விசாரணைகள் நடைபெறுவதாக முதல் அறிக்கையும்; மேலதிக விசாரணை அறிக்கைகளையும் தாக்கல் செய்யப்பட்டிருந்தது.
பிரான்ஸ் நாட்டின் குடியுரிமையைக் கொண்ட பகிரதி முருகேசுவின் ஒரே மகள் அவரது தாயார் கைது செய்யப்பட்டதிலிருந்து கடந்த 15 மாதங்களாக தனது பிறந்த நாட்டிற்கு செல்ல முடியாததினால் கல்வியை தொடரமுடியாத நிலை ஏற்பட்டுமிருந்தது.
நேற்றைய தினம் இந்த வழக்கு நீதிமன்றில் விசாரணைக்கு எடுக்கப்பட்ட வேளையில் போதிய சாட்சியங்கள் இன்மையால் சட்டமா அதிபரினால் சந்தேகநபரை விடுதலை செய்ய எடுக்கப்பட்ட முடிவின் பிரதியை பொலிசார் நீதிமன்றில் சமர்ப்பித்ததையடுத்து கொழும்பு நீதலான் நீதிமன்ற நீதிபதி திருமதி அருணு ஆட்டிகல பகிரதி முருகேசுவை விடுதலை செய்தார்.
No comments:
Post a Comment