பல்வேறு திருட்டு சம்பவங்களுடன் தொடர்புடைய 3 பேரை யாழ். சிறுகுற்றத் தடுப்பு பிரிவினர் கைதுசெய்துள்ளனர்.
யாழ். நாவாந்துறை ஐந்து சந்தியில் வைத்து நேற்று முன்தினம் கைது செய்யப்பட்டுள்ளனர். கைதுசெய்யப்பட்ட மூவரும் யாழ். ஓட்டுமடம் பகுதியைச் சேர்ந்தவர்கள்.
உள்நாட்டில் தயாரிக்கப்பட்ட கிரைனட் 01 மற்றும் கத்தி, மோட்டார் சைக்கிள் 2 உட்பட பல பொருட்கள் இவர்களிடமிருந்து மீட்கப்பட்டுள்ளன.
அரியாலையில் வெற்றுக் காணி ஒன்றினுள் மோட்டார் சைக்கிள் இருப்பதாக பொதுமக்கள் பொலிஸாருக்கு வழங்கிய தகவலின் பிரகாரம் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளனர்.
அந்த விசாரணையின் போதே குறித்த மூவரும் கைதுசெய்யப்பட்டுள்ளனர்.
கைதுசெய்யப்பட்ட மூவரையும் விசாரணையின் பின்னர் நீதிமன்றில் ஆஜர்படுத்துவதற்கான நடவடிக்கையினை யாழ்ப்பாணம் பொலிஸார் மேற்கொண்டு வருகின்றனர்.
No comments:
Post a Comment