இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்ப்பை அடிப்படையாக கொண்டு உள்நாட்டு பொறிமுறையிலா? அல்லது சர்வதேச பொறிமுறையிலான போர்குற்ற விசாரணையையா? முன்மொழிவது என்பது தீர்மானிக்கப்பட வேண்டும் என மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தொரிவித்துள்ளார்.
இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தத்தின் போது பல்லாயிரக்கணக்கான சிவிலியன்கள் படுகொலை செய்யப்பட்டதாக சந்தேகிக்கப்படுகின்றது. சிறுவர்களும்,ஊடகவியலாளர்களும் சித்திரவதை செய்யப்பட்டு கொலை செய்யப்பட்டனர்.
இலட்சக்கணக்கானவர்கள் அகதிகளாக்கப்பட்டனர் சர்வதேச ரீதியாக தடைசெய்யப்பட்ட இரசாயணக் குண்டுகள் அப்பாவி பொதுமக்கள் வாழும் பிரதேசங்களை நோக்கி வீசப்பட்டன.
அத்துடன் இலங்கையில் நடைபெற்ற இறுதி யுத்தம் சர்வதேச போர் விதிமுறைகளுக்கு எதிரானது என பல்வேறு தரப்பினரால் வாதங்கள் முன்வைக்கப்பட்டுள்ளன.
இந்த நிலையிலேயே பாதிக்கப்பட்ட மக்கள் தமக்கு இளைக்கப்பட்ட அநீதிக்கு சர்வதேச சமூகத்திடம் நியாயம் கேட்கின்றனர். யுத்தக்குற்ற விசாரணை சர்வதேச பொறிமுறை ஒன்றின் மூலம் ஐக்கிய நாடுகள் சபைக்குட்பட்ட நிறுவனங்கள் மேற்கொண்டால் மாத்திரமே அது சுயாதீனமானதாகவும், பக்கச்சார்பற்றதாகவும் அமைய வாய்ப்பிருக்கிறது.
சில உலக நாடுகள் இலங்கையின் அரசியல் களத்தில் தமது ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் உள்ள சாதக பாதக போக்கை அடிப்படையாக கொண்டு இலங்கையின் யுத்தக்குற்ற விசாரணையின் போக்கை திசைதிருப்ப முனைகின்றன.
இலங்கை சர்வதேச நாடுகளின் பிடியிலிருந்து நிரந்தரமாக விடுபடுவதற்கு ஏற்ற வகையில் இவ்விடயத்தை கையாளவேண்டும். அத்துடன் பாதிக்கப்பட்ட மக்களின் எதிர்பார்பிற்கு ஏற்ற வகையில் யுத்த குற்ற விசாரணை மேற்கொள்ள வழிவிட வேண்டும்.
இலங்கையில் ஆட்சி மாற்றம் ஏற்படுவதற்கு யுத்தத்தின் வடுக்களும், பாதிப்புக்களுக்கான நியாயம் கிடைக்கும் என்ற தமிழர்களின் எதிர்பார்ப்புமே பிரதான காரணமாகும். தமிழ் மக்கள் எந்த நியாயத்திற்காக ஆட்சிமாற்றத்தை ஏற்படுத்தினார்களோ அந்த நியாயம் அவர்களுக்கு கிடைக்காவிட்டால் நல்லாட்சி
அர்த்தமற்றதாகிவிடும்.
அர்த்தமற்றதாகிவிடும்.
புதிய ஆட்சியில் அமைச்சு பதவிகளை பெற்றுக்கொண்ட அமைச்சர் மணோகணேசன் போன்றவர்கள் தமது நிலைப்பாட்டை மாற்றிக்கொண்டாலும் தமிழ் மக்கள் தமது நிலைப்பாட்டில் உறுதியாகவே இருக்கிறார்கள்.
யுத்தக் குற்ற விசாரணை விடயத்தில் அப்பட்டமான மனித உரிமை மீறலுக்கு காரணமாக இருந்தவர்கள் எவராக இருந்தாலும் அவர்களின் அந்தஸ்த்து, பதவி, அரசியல் செல்வாக்கு என்பவை விசாரணைக்கு தடைபோடாமலிருக்க சர்வதேச பொறிமுறையே பொருத்தமானது என்பதே தமிழ் மக்களின் நிலைப்பாடாகும்.
இலங்கை இரானுவத்தினரை சர்வதேச விசாரணைக்கு கொண்டு செல்ல அனுமதிக்க மாட்டோம் என சில அதிகார தரப்பினர்கள் கூறிவருகின்றனர்.
இது உள்நாட்டில் விசாரணை பொறிமுறையை உருவாக்கி விசாரணைகள் மேற்கொள்ளப்பட்டால் அதன் முடிவு எவ்வாறு இருக்கும் என்பதை கோடிட்டு காட்டுகிறது. இந்நிலையில் யுத்தத்தால் பாதிக்கப்பட்ட மக்களின் உணர்வுகளை புரிந்து கொண்டு செயற்பட வேண்டியது அவசியமாகும் எனவும் மத்திய மாகாண சபை உறுப்பினர் கணபதி கனகராஜ் தெரிவித்துள்ளார்.
No comments:
Post a Comment