இந்தியாவில் முகாம் ஒன்றில் தடுத்து வைக்கப்பட்டுள்ள இலங்கையர் ஒருவர் தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தமிழக காவற்துறையினர் தெரிவித்துள்ளனர்.
திருச்சி சிறப்பு முகாமில் இருக்கும் இந்த இலங்கையர் மருந்து ஒன்றை
அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
அளவுக்கு அதிகமாக உட்கொண்டு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக தெரியவருகிறது.
தன்னை விடுதலை செய்யுமாறு கோரிக்கை விடுத்த போதிலும் அதிகாரிகள் அதற்கு பதில் எதனையும் அளிக்காத காரணத்தினால், இந்த நபர் இவ்வாறு தற்கொலை செய்து கொள்ள முயற்சித்துள்ளதாக கூறப்படுகிறது.
சட்டவிரோதமாக வெளிநாடுகளுக்கு ஆட்களை அனுப்பி வைக்கும் நடவடிக்கையில் ஈடுபட்டதாக இந்த நபருக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளதுடன் இந்த குற்றச்சாட்டு குறித்து இன்னும் விசாரணைகள் நடத்தப்படவில்லை என தெரியவருகிறது.
இதற்கு முன்னர் திருச்சி சிறப்பு முகாமில் தடுத்து வைக்கப்பட்டிருந்த 5 இலங்கையர்கள் தம்மை விடுதலை செய்ய கோரி உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்டமை குறிப்பிடத்தக்கது.
இலங்கை அகதி தற்கொலை முயற்சி! அளவுக்கதிகமான தூக்க மாத்திரைகள் கிடைத்தது எப்படி?
நேற்று முன்தினம் திருச்சியில், அகதிகளுக்கான சிறப்பு முகாமில் உள்ள 30 வயதினை சேர்ந்த யுகப்பிரியன் என்ற வாலிபர் தற்கொலைக்கு முயற்சித்துள்ளார்.
மயங்கிய நிலையில் அவதானிக்கப்பட்ட இவர், அளவுக்கு அதிகமாக தூக்க மாத்திரை சாப்பிட்டு தற்கொலைக்கு முயன்றது தெரியவந்துள்ளது.
தமிழகத்தின் திருச்சி மத்திய சிறையில் இலங்கை அகதிகளுக்கான சிறப்பு முகாம் உள்ளது. இங்கு வேறு சிறை முகாம்களில் இருந்து மாற்றப்பட்ட 15 பேர் உள்ளனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இவர்களை விடுதலை செய்ய வேண்டும் என வலியுறுத்தி அடிக்கடி முகாம் சிறைகளில் உள்ளவர்கள் உண்ணாவிரதம் உள்ளிட்ட போராட்டங்களில் ஈடுபட்டு வருகின்றனர்.
இந்நிலையில், நேற்று முன்தினம் யுகப்பிரியன் தற்கொலைக்கு முயன்றதனை தொடர்ந்து, அவரை சிறை காவல்துறையினர் மீட்டு, திருச்சி அரச வைத்தியசாலையில் நேற்று நள்ளிரவு சேர்த்தனர்.
அங்கு, அவருக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. தற்போது அவரது உடல் நிலை தேறி உள்ளதாக அதிகாரிகள் கூறினர்.
இதற்கிடையே, திருச்சி மத்திய சிறை அகதிகள் சிறப்பு முகாமில் அடைக்கப்பட்டுள்ள இளைஞருக்கு 20 தூக்க மாத்திரைகள் மொத்தமாக கிடைத்தது எப்படி என்பது பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
முகாம் சிறைகளில் உள்ள அவர்களை இரண்டு நாட்களுக்கு ஒருமுறை சிறை வைத்தியசாலை வைத்தியர்கள் சென்று பரிசோதனை செய்வது வழக்கம். அப்போது கைதிகள் தூக்கம் வரவில்லை என்று கூறினால் கூட இரண்டு மாத்திரைகள் மட்டுமே வைத்தியர்கள் வழங்குவார்கள்.
ஆனால் 20 தூக்க மாத்திரைகள் யுகப்பிரியனுக்கு கிடைத்து எப்படி என்பது மர்மமாக உள்ளது.
கைதிகளை பார்க்க வரும் உறவினர்கள் மூலம் மாத்திரைகள் கடத்தப்பட்டதா? அல்லது சிறை துறை வைத்தியர்களின் கவனக் குறைவா? என்பது சந்தேகமாக உள்ளது.
இது குறித்து கே.கே.நகர் காவல்துறையினர் மற்றும் திருச்சி விமான நிலைய காவல்துறை அதிகாரிகள், முகாம் சிறைக்கு சென்று விசாரணை நடத்தி வருகின்றனர்.
இதில் திடுக்கிடும் தகவல்கள் வெளியாகலாம் என நம்பப்படுகின்றது.
No comments:
Post a Comment