திருகோணமலை மாவட்டத்தின் கந்தளாய் பிரதேச செயலக
பிரிவுக்குட்பட்ட பகுதிகளில் காட்டு யானைகளின் அட்டகாசம் நாளுக்கு நாள்
அதிகரித்து வருவதாகவும் யானைகளுக்காக வேண்டி அமைக்கப்பட்ட பாதுகாப்பு
வேலிகளையும் உடைத்து சேதப்படுத்தி விட்டு கிராமங்களுக்குள் வருவதாகவும் அப்பகுதி மக்கள் கவலை தெரிவித்துள்ளனர்.
வான்எல மற்றும் ஜயந்திபுர போன்ற பகுதிகளிலே அதிகமாக பகல் வேளைகளில் காட்டு யானைகள் கிராமங்களுக்குள் புகுந்து உணவு தேடுவதாக அப்பகுதி மக்கள் தெரிவிப்பதோடு,
இதனால் தாம் பல அசௌகரியங்களை எதிர்கொள்வதாகவும் இரவு வேளைகளில் அச்சத்துடன் இருப்பதாகவும் தெரிவித்துள்ளனர்.
இது தொடர்பாக வன ஜீவராசிகள் பாதுகாப்புத் திணைக்கள அதிகாரிகளிடம் முறையிட்ட போது பாதுகாப்பு வேலிகள் அமைக்கப்பட்டது.
இருந்தபோதிலும் காட்டு யானைகள் வேலிகளை சேதப்படுத்துவதாகவும் மக்கள் தெரிவிக்கின்றனர்.
அண்மையில் வான் எல பகுதியைச் சேர்ந்த ஒருவர் யானைத்தாக்குதலுக்குள்ளாகி இறந்ததும் குறிப்பிடத்தக்கது.
எனவே இப்பிரதேசங்களில் காணப்படும் காட்டு யானைகளை வேறு காட்டுப்பகுதிகளுக்கு விரட்டுமாறும், இதனை உரிய அதிகாரிகள் கூடிய விரைவில் மேற்கொள்ள வேண்டும் எனவும் அப்பகுதி மக்கள் வேண்டுகோள் விடுத்துள்ளனர்.

No comments:
Post a Comment