புங்குடுதீவு மாணவி வித்தியாவின் படுகொலை தொடர்பில் கைது செய்யப்பட்டு விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ள சந்தேக நபர்கள் 9 பேருக்கும் எதிர்வரும் 29ம் திகதி வரை விளக்கமறியல் நீடிக்கப்பட்டுள்ளது.
குறித்த சந்தேக நபர்களை இன்று ஊர்காவற்துறை நீதிமன்றத்தில்
ஆஜர்படுத்திய போது நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
ஆஜர்படுத்திய போது நீதிபதி செல்வநாயகம் லெனின்குமார் இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்தியாவின் கண் பகுதியிலிருந்து பெறப்பட்ட விந்தணுவை பரிசோதனைக்கு உட்படுத்த உத்தரவு
படுகொலை செய்யப்பட்ட வித்தியாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணுவை மரபணு பரிசோதனைக்கு உட்படுத்துமாறும் நீதிபதி உத்தரவிட்டுள்ளார்.
குறித்த வழக்கு இன்று செவ்வாய்க்கிழமை ஊர்காவற்துறை நீதிமன்ற நீதவான் எஸ்.லெனின்குமார் முன்னிலையில் விசாரணைக்கு எடுத்துக் கொள்ளப்பட்ட போதே நீதிபதி இந்த உத்தரவை பிறப்பித்துள்ளார்.
வித்யாவின் சடலத்தின் கண் பகுதியில் இருந்து பெறப்பட்ட விந்தணு மாதிரியை மேலும் ஒரு தடயப் பொருளாக சட்ட வைத்திய அதிகாரி, நீதிமன்றத்தில் இன்று சமர்ப்பித்துள்ளார்.
இதற்கமைய இந்த விந்தணு மாதிரியை மரபணு பரிசோதனைக்காக, ஜின்டெக் நிறுவனத்திற்கு அனுப்பி வைக்குமாறு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
அதேவேளை ஏற்கனவே சந்தேகநபர்களிடமிருந்து பெறப்பட்டுள்ள மரபணுக்களுடன் அதனை ஒப்பிட்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறும் குற்றப் புலனாய்வுத் திணைக்களத்திறக்கு நீதவான் உத்தரவிட்டுள்ளார்.
இந்த வழக்கு இம்மாதம் 29ம் திகதிவரை ஒத்திவைக்கப்பட்டுள்ளது.
No comments:
Post a Comment