September 15, 2015

குமார் சங்கக்கார இல்லாது பேரிழப்பு - இந்திய பிரதமர்!

இந்தியாவுக்கும் இலங்கைக்கும் இடையில் மனிதர்களுக்கும் மனிதர்களுக்கும் இடையிலான உறவுகளை முன்னெடுத்துச் செல்ல முயற்சிப்பதாக இந்திய பிரதமர் நரேந்திர மோடி தெரிவித்துள்ளார்.

அத்துடன் இலங்கையின் நட்சத்திர துடுப்பாட்ட வீரர் குமார் சங்ககார கிரிக்கெட் மைதானத்தில் இல்லாமல் போனது அனைவருக்கும் பேரிழப்பாகும் எனவும் அவர் கூறியுள்ளார்.
பிரதமர் ரணில் விக்ரமசிங்கவுடன் இணைந்து புதுடெல்லியில் உள்ள ஹைத்ராபாத் இல்லத்தில் நடத்தி ஊடகவியலாளர் சந்திப்பில் அவர் இதனை கூறியுள்ளார்.
நாங்கள் சிறிது காலத்திற்கு முன்னர் மனத்தில் பதியும் டெஸ்ட் போட்டி ஒன்றை நிறைவு செய்தோம். சிரேஷ்ட விளையாட்டு வீரர் குமார் சங்ககார இல்லாதது எம் அனைவருக்கும் இழப்பு எனவும் இந்திய பிரதமர் குறிப்பிட்டுள்ளார்.

No comments:

Post a Comment