August 29, 2015

காணாமல் ஆக்கப்படுதலுக்கு எதிரான சர்வதேச தினம் நாளை மன்னாரில் அனுஸ்டிப்பு!

சர்வதேச விசாரணையைக் கோரி காணாமல் ஆக்கபடுதலுக்கு எதிரான சர்வதேச தினம் நாளை மன்னாரில் அனுஸ்டிக்கப்படவுள்ளது.
காணாமல் ஆக்கப்பட்டோரின் குடும்பங்களின் சங்கம், வட கிழக்கு
மாகாணம் மற்றும் மன்னார் பிரஜைகள் குழு ஆகியன இணைந்து குறித்த தினத்தை அனுஸ்டிக்க ஏற்பாடுகள் செய்யபட்டுள்ளது.
குறிப்பாக காணாமல்போனோர் தொடர்பில் சர்வதேச விசாரணையை வலியுறுத்தப்படவுள்ளது.
இந்நிகழ்வு மன்னார் பிரஜைகள் குழுவின் தலைவர் அருட்பணி. செபமாலை அடிகளாரின் தலைமையில் நடைபெறவுள்ளது.
நாளை மன்னார் புனித செபஸ்தியார் பேராலய மண்டபத்தில் காலை 10 மணிமுதல் பகல் 12 மணிவரை குறிந்த நிகழ்வு நடைபெற ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளது.
குறித்த நிகழ்வுக்கு பிரதம விருந்தினரான அருட்பணி. இராஜேந்திரம் (இயேசு சபை அகதிப்பணியின் இலங்கைக்கான பிரதிநிதி, தமிழ் சிவில் சமூக அமைப்பின் இணைப்போச்சாளர், பகுதிநேர விரிவுரையாளர் கிழக்கு பல்கலைகழகம், திருகோணமலை கல்வியகம்) கலந்து கொள்ளவுள்ளார். 
இந்நிகழ்வில் காணாமல் ஆக்கப்படதலுக்கு எதிரன சர்வதேச விசாரணையை வலியுறுத்தல், காணாமல் ஆக்கபட்டுள்ள குடும்பங்களின் பாடசாலை மாணவ மாணவிகளின் தற்போதைய மனநிலையை பிரதிபலிக்கும் வகையில் சித்திரப் போட்டிகள் மற்றும் இது தொடர்பான கண்காட்சிகள் என்பன நடைபெறவுள்ளது.
வட கிழக்கு மாகாணங்களில் உள்ள காணமால் ஆக்கபட்டவர்களின் உறவுகள் இந்நிகழ்வில் கலந்து கொள்ளவுள்ளனர்.

No comments:

Post a Comment