August 29, 2015

ஓமந்தை சோதனைச் சாவடி நடவடிக்கைகள் இடைநிறுத்தம்

வடக்கையும் தெற்கையும் இணைக்கும் ஏ9 வீதிச் சோதனை நடவடிக்கைகள் இன்று முதல் முழுமையாக நீக்கப்பட்டுள்ளதாக இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
1997 ஆம் ஆண்டு முதல் செயற்பட்டு வந்த ஓமந்தைச் சோதனைச் சாவடியின் நடவடிக்கைகள் நிறுத்தப்பட்டு, வாகனங்கள் பிரதான வீதி வழியாக நேரடியாக செல்ல அனுமதி வழங்கப்பட்டுள்ளது.
கடந்த காலத்தில் ஓமந்தையின் பிரதான வீதி ஊடான பாதை மறிக்கப்பட்டு வாகனங்கள் பதிவு செய்யப்பட்ட பின்னர் மாற்று வழியூடாக இதுவரை பயணிக்க அனுமதி வழங்கப்பட்ட அதேவேளை, பொருட்களுடன் வரும் வாகனங்கள் அவற்றை சோதனைக்குட்படுத்தும் இடமாகவும் ஓமந்தை சோதனைச் சாவடி செயற்பட்டது
வரலாறாக மாறும் ஓமந்தைச் சோதனைச் சாவடி
ஓமந்தைச் சோதனைச் சாவடியிலிருந்து இராணுவத்தினர் அகற்றப்பட்டுள்ளனர்.
2009ம் ஆண்டு முடிவுக்குக் கொண்டு வரப்பட்ட போர் ஆரம்பமானது முதல் பல ஆண்டுகளாக வவுனியா ஓமந்தையில் இராணுவச் சோதனைச் சாவடி அமைக்கப்பட்டிருந்தது.
உச்ச கட்ட போர்க் காலத்தில் இராணுவச் சோதனைச் சாவடிக்கு எதிரில் புலிகளின் சோதனைச் சாவடியொன்றும் காணப்பட்டது.
வடக்கிற்கு சென்ற வாகனங்களை தமிழீழ விடுதலைப் புலிகள்  ன தீவிர சோதனைக்கு உட்படுத்தினர்.
புலிகளின் அனுமதியின்றி வடக்கிற்கு வாகனங்கள் செல்ல முடியாத நிலைமை காணப்பட்டது.
இதேவிதமாக இலங்கை இராணுவத்தினரும் பயணிகளையும் வாகனங்களையும் கடுமையான சோதனைக்கு உட்படுத்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.
சாதாரண பொதுமக்கள் எவ்வித சோதனைக்கும் இனி உட்படுத்தப்பட மாட்டார்கள் என இராணுவத்தினர் தெரிவித்துள்ளனர்.
எனினும், குறித்த சோதனைச் சாவடியில் இராணுவ பொலிஸார் தொடர்ந்தும் கடமையில் ஈடுபடுத்தப்பட உள்ளனர்.

No comments:

Post a Comment