August 24, 2015

தற்கொலை செய்து கொண்ட முன்னாள் போராளி குடும்பத்துக்கு உதவி (படங்கள் இணைப்பு)

முல்லைத்தீவு புதுக்குடியிருப்பு இரணைபாலையில் வசித்து வந்த முன்னாள் போராளியான ஆ.பிரஸ்லின் அவர்கள் மூளையில் ஏற்பட்ட கட்டி காரணமாக ஏற்பட்ட வலி தாங்க முடியாமலும் ,வைத்திய செலவுக்கு யாரும் உதவாத நிலையிலும்,
குடும்ப வறுமையும் அவரை வாட்டிய நிலையில் 08.08.2015 அன்று தூக்கு மாட்டி தற்கொலை செய்து கொண்டார் .
இவரின் இந்த இழப்பால் மனைவி அருள் மேரி ,மற்றும் 6 வயது .3 வயது .9 மாத அவரின் 3 பெண் பிள்ளைகளும் மிக கஷ்டப்பட வேண்டிய நிலைக்கு தள்ளபட்டார்கள் .
எனினும் அவரின் நிலையை செந்தணல் வெளியீட்டக உரிமையாளரும் ,கவிஞரும் ,சமுக ஆர்வலருமான வன்னியூர் செந்தூரன் அவர்கள் தமிழ் விருட்சம் சமூக ஆர்வலர்கள் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் (கண்ணன் ) அவர்களிடம் தெரிவித்ததன் மூலம் கனடா வாழ் ராம் சிவா அவர்களினால் தமிழ் விருட்சம் ஊடாக ஒரு தொகை பணம் ,அரிசி ,மா ,சீனி ,அங்கர் ,பருப்பு ,கிழங்கு என ஒரு மாத உலர் உணவு பொதிகளும் ,பிள்ளைகளுக்கு ஆரோக்கிய உணவுகளும் ,படிக்கும் ஒரு பெண் பிள்ளைக்கு புத்தக பை ,கொப்பிகள் ,கொம்பாஸ் என உதவிகள் 21.08.2015 அன்று அவர்களது இல்லத்துக்கு சென்று வழங்கிவைக்க பட்டது
இந்த நிகழ்வில் தமிழ் விருட்சம் அமைப்பின் தலைவர் சந்திரகுமார் ,செயலாளர் மாணிக்கம் ஜெகன் ,காவிய பிரதீபா வன்னியூர் செந்தூரன் ,பண்டாரவன்னியன் விளையாட்டு கழக தலைவர் சந்திரன் ஆகியோர் கலந்து கொண்டு வழங்கி இருந்தனர் .
பிரஸ்லினின் அம்மா ஆ.அந்தோணியாபிள்ளை தனது மகன் பட்ட வேதனைகளையும் ,துன்பங்களையும் அழுதவாறே சொன்ன போது சென்றவர் மனம் எல்லாம் கலங்கியது ,முன்னாள் போராளிகள் படும் வேதனைகளை நினைத்து கனத்த மனதுடன் விடை பெற்றோம் .
அதே போல் வவுனியா மரகாரம்பளையில் வசிக்கும் சோதிநாதன் ,பாக்கியலட்சுமி ஆகியோர் சாப்பாடுக்கே கஷ்ட படுவதாக சமூக ஆர்வலர் மாணிக்கம் தமிழ் விருட்சத்துக்கு தெரிய படுத்தவே அந்த குடும்பத்துக்கும் .அரிசி ,மா ,சீனி உட்பட்ட அத்தியாவசிய உலர் உணவு பொருட்கள் கனடா வாழ் ராம் சிவா நிதி அனுசரணையில் வழங்கி வைக்க பட்டன .
வறுமையின் நிமித்தம் 2 பிள்ளைகள் சிவன் அருளகத்தில் வைத்து படிப்பிக்கும் அவர்கள் 6ம் ஆண்டு படிக்கும் ஒரு பெண் பிள்ளை பெரியவளாகியும் அவர்கள் முறைப்படி சிறு சடங்கு செய்யவே கையில் பணம் இல்லாத படியில் ஒரு அறையில் முடங்கி உள்ளார் வெளியில் வராமல், இது சம்மந்தமாக தமிழ் விருட்சம் பெண்கள் அமைப்புகளிடமும் தெரிய படுத்தி உள்ளனர் ,
அந்த சிறு பெண் பிள்ளையை வெளியில் கொண்டுவர சமூக அமைப்புகள் முன் வர வேண்டும் எனவும் தமிழ் விருட்சம் அமைப்பினர் கோரிக்கை விடுத்துள்ளனர் .


unnamed (20) unnamed (32) unnamed (31) unnamed (30) unnamed (29) unnamed (28) unnamed (27) unnamed (26) unnamed (25) unnamed (24) unnamed (23) unnamed (22) unnamed (21)

No comments:

Post a Comment