சிறீலங்காவின் முன்னாள் ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவை எதிர்க்கட்சித் தலைவராக நியமிக்குமாறு கோரி ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்பின்
நாடாளுமன்ற உறுப்பினர்கள் 65 பேரின் கையெழுத்துடனான கடிதமொன்று சபாநாயகரிடம் கையளிக்கப்படவுள்ளது.
புதிய நாடாளுமன்றத்தின் கன்னியமர்வு அடுத்தமாதம் நடைபெறவுள்ள நிலையில் புதிய சபாநாயகரிடம் இந்தக் கடிதம் கையளிக்கப்படும் என ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர் ரஞ்சித் த சொய்ஸா தெரிவித்துள்ளார்.
குறித்த கடிதத்தில் நாடாளுமன்றத்திற்குத் தெரிவாகியுள்ள ஸ்ரீலங்கா சுதந்திதக் கட்சியின் 60 உறுப்பினர்கள் கையெழுத்திட்டிருப்பதாகவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை ஐக்கிய தேசியக் கட்சிக்கும், ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சிக்கும் இடையில் தேசிய அரசாங்கம் அமைப்பது தொடர்பான புரிந்துணர்வு ஒப்பந்தம் கைச்சாத்திடப்பட்டுள்ளது.
இந்த நிலையில் இதற்கு ஸ்ரீலங்கா சுதந்திரக் கட்சியிலுள்ள சில உறுப்பினர்கள் எதிர்ப்பை வெளிப்படுத்தியிருப்பதாக அறியமுடிகிறது
No comments:
Post a Comment