June 30, 2016

ஐந்து முன்னாள் போராளிகள் இன்று விடுதலை!

வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாமில் புனர்வாழ்வு பெற்று வந்த ஐந்து முன்னாள் போராளிகள் இன்று விடுதலை செய்யப்பட்டனர்.
பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் பணிப்பாளர் கேணல் எம்.ஏ.ஆர்.கமிடோன் தலைமையில் நடைபெற்ற இந்த நிகழ்வில் சிறப்பு அதிதியாக புனர்வாழ்வு ஆணையாளர் நாயகம் மேஜர் ஜெனரல் ஆர்.எம்.ஜெ.ஏ.ரத்நாயக்கா கலந்துகொண்டார். இதன்போது, வவுனியா புனர்வாழ்வு நிலையத்தில் புனர்வாழ்வு பெற்ற பயிலுனர்கள் தனது அனுபவங்களை பகிர்ந்துகொண்டனர்.

 
இதனைத்தொடர்ந்து, 25 பயிலுனர்களுக்கு தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் புனர்வாழ்வு ஆணையாளரால் வழங்கப்பட்டன. விசேடமாக இறுதி யுத்தத்தில் செல் தாக்குதலில் கால்களில் காயப்பட்டு நடக்க முடியாத போராளி ஒருவருக்கும் தச்சுத் தொழிலுக்கான உபகரணங்கள் வழங்கப்பட்டன. இந்நிகழ்வில், சர்வ மத குருமார்கள், வவுனியா பூந்தோட்டம் புனர்வாழ்வு முகாம் உதவிப் பணிப்பாளர் பிரிகேடியர் தர்சன லியனகே, கேணல்சித்திர குணதுங்க, கடற்படை அதிகாரிகள், வவுனியா பொது வைத்தியசாலை வைத்தியர் எஸ் சந்திரகுமார் உள்ளிட்ட பலரும் கலந்துகொண்டனர்.


No comments:

Post a Comment