June 30, 2016

பிரித்தானியாவுக்கு ஐரோப்பிய ஒன்றியம் எச்சரிக்கை!

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானிய விலக வேண்டும் என அந்நாட்டு மக்கள் வாக்களித்துள்ள நிலையில் 40 ஆண்டுகளுக்கு பின்னர் பிரித்தானிய இல்லாமல் ஐரோப்பிய ஒன்றியத்தின் உச்சிமாநாடு இடம்பெற்றுள்ளது.


பிரஸல்சில் இடம்பெற்ற இவ்வுச்சி மாநாட்டின் போது ஐரோப்பிய ஒன்றியத்தின தலைவர் டொனால்ட் டஸ்க் பிரித்தானியாவுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார்.

ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து விலகிய பின்னர், ஒன்றியத்தின் ஒன்றை சந்தை அணுகு முறையை தக்க வைத்துகொள்ள பிரித்தானிய விரும்பம் பட்சத்தில், ஒன்றியத்தின் மக்களுக்கு தடைகள் எதுவும் இன்றி சென்று வருவதற்கு பிரித்தானியா அனுமதிக்க வேண்டும்.

இக்கொள்கையினை பிரித்தானியா மதிக்க வேண்டியது கட்டாயமான ஒன்று என ஐரோப்பிய ஒன்றியத்தின் தலைவர் டொனால்ட் டஸ்க் எச்சரிக்கை விடுத்துள்ளார்.

இதன் போது தொடர்ந்தும் கருத்து தெரிவித்த அவர், பிரித்தானியாவுக்கு தேவையானதை தானே எடுத்துகொள்ளும் ”அ லா கார்ட்” மெனு பாணியினை கடைப்பிடிக்க முடியாது.

சந்தை, பொருட்கள், மக்கள் மற்றும் மூலதனம் ஆகியன குறித்த சுதந்திர சுழற்சிகளை பிரித்தானியா ஏற்றுக்கொள்ள வேண்டும் என அவர் மேலும் தெரிவித்துள்ளார்.

இதேவேளை, ஐரோப்பிய ஒன்றியத்திலிருந்து பிரித்தானியா விலகும் முடிவினை எடுத்த பின்னர், நிலவும் நிலையில்லாத் தன்மை காலத்தை கட்டுப்படுத்த ஜேர்மன் வலியுறுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது.

No comments:

Post a Comment