ஆம்பூர் அடுத்த கீழ்முருங்கை கிராமத்தை சேர்ந்தவர் கோமதி(22). இவருக்கு விழுப்புரம் மாவட்டம் கோழியனூரை சேர்ந்த மணிமாறன்(30) என்பவருக்கும் கடந்த 3 ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடந்தது. மணிமாறன் கூலி வேலை செய்து வருகிறார்.
திருமணத்திற்கு பிறகு கணவருடன் கோழியனூர் கிராமத்திலேயே கோமதி வசித்து வந்தார். 2½ வயதில் பெண் குழந்தை உள்ளது.
இந்த நிலையில் 2–வது முறை கர்ப்பமாக இருந்த கோமதி பிரசவத்திற்காக கீழ்முருங்கை கிராமத்தில் உள்ள தாய் வீட்டிற்கு கடந்த 6 மாதங்களுக்கு முன்பு வந்தார்.
சுக பிரசவத்தில் குழந்தை பெற்றெடுத்து 5 மாதங்கள் ஆகிறது. இதற்கிடையில் கோமதிக்கும் அதே பகுதியில் உள்ள 17 வயது சிறுவன் வேலுக்கும் (17) (பெயர் மாற்றப்பட்டுள்ளது). பழக்கம் ஏற்பட்டதாக கூறப்படுகிறது.
வேலுடன் ஏற்பட்ட நெருக்கம் நாளடைவில் அதிகமானதால் 2 குழந்தைகளையும் விட்டு விட்டு கடந்த மாதம் 26–ந்தேதி சிறுவனுடன் கோமதி வீட்டை விட்டு வெளியேறினார்.
மகள் திடீரென மாயமானதால் அதிர்ச்சியடைந்த பெற்றோர் பல இடங்களில் தேடினர். பின்னர் சிறுவன் வேலுடன் கோமதி மாயமானது தெரியவந்தது.
இதுகுறித்த கோமதியின் கணவர் மணிமாறன் ஆம்பூர் தாலுகா போலீசில் புகார் அளித்தார். போலீசார் வழக்கு பதிவு செய்து சிறுவனுடன் மாயமான கோமதியை தேடி வந்தனர்.
இந்த நிலையில் வேலூரில் வீடு வாடகைக்கு எடுத்த சிறுவனுடன் கோமதி 2 மாதமாக குடும்பம் நடத்தி வருவது பற்றி போலீசாருக்கு தகவல் கிடைத்தது.
இன்ஸ்பெக்டர் பாபு ரவிச்சந்திரன் மற்றும் போலீசார் நேற்று நள்ளிரவு 11 மணியளவில் வேலுருக்கு வந்தனர். சிறுவன் வேல், கோமதியை கையும் களவுமாக பிடித்து போலீஸ் நிலையம் கொண்டு சென்றனர்.
வேலுக்கு 17 வயது ஆவதால் கோமதி மீது கடத்தல் வழக்கு பதிவு செய்யப்பட்டலாம் என போலீஸ் தரப்பில் கூறப்படுகிறது. கோமதியிடம் போலீசார் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
No comments:
Post a Comment