வடமராட்சி கரவெட்டி விநாயகர் வித்தியாலயத்தில் நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
கடந்த 8வருடங்களுக்கு மேலாக அங்கு நிலைகொண்டிருந்த இராணுவத்தினர் கடந்த 30ஆம் திகதி வியாழக்கிழமை காலை அங்கிருந்து வெளியேறியுள்ளனர்.
மேற்படி பாடசாலை சுமார் ஒரு ஏக்கர் பரப்பளவு விஸ்தீரணத்தைக் கொண்டது. அத்துடன் அங்கு தரம் 5 வரை மாணவர்கள் கல்வி பயின்று வந்திருந்தனர்.
இந்நிலையில் மேற்படி பாடசாலை யுத்த காலத்தில் இராணுவத்தினரால் கையகப்படுத்தப்பட்டிருந்தது.
இவ்வாறு இராணுவத்தினரின் பாவனையில் இருந்து வந்த மேற்படி பாடசாலையே தற்போது இராணுவத்தினரால் விடுவிக்கப்பட்டுள்ளது.
இதேவேளை மேற்படி பாடசாலையை மீள ஆரம்பிக்குமாறு அப்பகுதி பொதுமக்கள் கோரிக்கை விடுத்திருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது.

No comments:
Post a Comment